யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குமுதம் ஊடகம் Flower Art என்று வெளியிட்ட வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
வயதான முதியவர் ஒருவர் பூக்களை வைத்து கடவுள் மகாலட்சுமி உருவத்தை உருவக்குகிறார் எனவும் “ஏலே நீ ஒரு Artist-னு நிரூபிச்சிட்டல” என்று தலைப்பிட்டு குமுதம் ஊடகம் அவர்களது அதிகாரப்பூர்வ instagram பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.
உண்மை என்ன ?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது “Reaction_shorts” என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

அதில் AI மற்றும் Edit என்ற Hastag பயன்படுத்தப்பட்டிருந்தது. இவற்றை தொடர்ந்து இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதை உறுதிச் செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், பரவி வரும் வீடியோ 99.9% செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதுதான் என்பது உறுதியானது.

மேற்கூறிய விவரங்களில் இருந்து, குமுதம் ஊடகம் Flower Art என்று வெளியிட்ட வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவை என்பது உறுதியானது.
இது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்ட எண்ணற்ற போலி செய்திகளை Youturn மீடியா அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
ஹனுமான் படத்தை வரையும் குரங்கு என்று தவறாகப் பரப்பப்படும் வீடியோ!
இஸ்ரேலிய தலைநகரமான டெல் அவிவில் தாக்குதல் என்று பரவும் AI வீடியோ!
தவெக நிர்வாகிகள் மது பாட்டில்களுடன் இருப்பது போல் பரவும் AI புகைப்படம்!
முடிவு :
நம் தேடலில், பரவும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், இது AI மூலம் உருவாக்கப்பட வீடியோ என்பதையும் அறியமுடிகிறது.
