YouTurn

தமிழ்நாட்டில் திமுகவினரால் விவசாயி ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டதாக பரப்பப்படும் தவறான செய்தி!

தமிழ்நாட்டில் திமுகவினரால் விவசாயி ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டதாக பரப்பப்படும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது திருமணம் தாண்டிய உறவு காரணமாக மாமனாரை மருமகள் எரித்து கொல்ல முயன்ற சம்பவமாகும்.

பரவிய செய்தி

‘தமிழ்நாட்டில் விவசாயி ஒருவரை திமுக கட்சியினர் உயிருடன் எரித்துவிட்டனர்’


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

உடலில் தீ வைக்கப்பட்ட ஒருவர் உயிர் போகும் வேதனையில் சாலையில் ஓடுகிறார். அவரை பார்க்கும் மக்கள் பயத்தில் விலகி ஓடுகிறார்கள். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘தமிழ்நாட்டில் விவசாயி ஒருவரை திமுக கட்சியினர் உயிருடன் எரித்துவிட்டனர்’ என்று தவெக ஆதரவாளரால் பரப்புகிறார். 

உண்மை என்ன? 


சமீபத்தில் விவசாயி ஒருவர் தெருவில் எரிக்கப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ‘Polimer News’ செய்தித்தளத்தில் ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 



அதன்படி, ’கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் மாளிகம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முந்திரி விவசாயி ஆவார். இவரது மகன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின்னர் இவரது மருமகள் ஜெயப்பிரியா-க்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை ராஜேந்திரன் கண்டித்துள்ளார். 



இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரியாவின் தூண்டுதலால் மணிகண்டன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரனை சாலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது தொடர்பாக ஜெயப்பிரியா, மணிகண்டன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


‘News 18 தமிழ்நாடு’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியிலும் இதே தகவல்களை காணமுடிகிறது. 


இதிலிருந்து, இது திருமணம் தாண்டிய உறவு காரணமாக மாமனாரை மருமகள் எரித்த சம்பவம் என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


திருமணம் தாண்டிய உறவு காரணமாக மாமனாரை மருமகள் எரித்த சம்பவத்தை திமுகவினர் விவசாயி ஒருவரை உயிருடன் எரித்துவிட்டதாக தவெக ஆதரவாளரால் தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க