YouTurn

ஹிமாலயாவின் ஹலால் கொள்கை எனப் பரவும் தவறானத் தகவல்!

ஹிமாலயாவின் ஹலால் கொள்கை எனப் பரவும் தவறானத் தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஹிமாலயாவின் ஹலால் கொள்கை எனப் பரவும் தவறானத் தகவல்!

பரவிய செய்தி

பரவிய செய்தி :


ஹலால் கொள்கையை அறிவித்ததற்கு நன்றி ஹிமாலயா.  இனி இந்து தேவையான வேலையைச் செய்யும்.  இமயமலை தயாரிப்புகளை புறக்கணிக்கவும்.  நாங்கள் ஒரு இஸ்லாமிய நிறுவனம் என்று பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.  இப்போது இந்த பொருளை வாங்காமல் இருப்பது ஒவ்வொரு இந்துக்களின் கடமை.



X LINK

விரிவான விளக்கம்

இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் ஆட்டாவின் பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் பரவி வந்த நிலையில்,  தற்போது ஹிமாலயா நிறுவனத்தின் பெயரில் ஹிமாலயா பாலிசி  என்ற  தலைப்பில் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் ஹலால் கொள்கை என்ற தலைப்பின்கீழ்,  இஸ்லாமியர்கள் ஹலால் பொருட்களை உட்கொள்வதற்கான கடமையை நிறைவேற்ற, எங்கள் தயாரிப்புகள் இஸ்லாமிய சட்டம்  ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்ட பொருட்கள்  எவையும் இல்லாமல் இருக்கும்  எனக் குறிப்பிட்டிருந்தது.

உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், 2022ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியிருப்பதை பார்க்க முடிந்தது. 


மேலும் ஹிமாலயா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கங்களில் தேடியதில், Himalaya Wellness Company என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த ஆண்டு 2022 ஏப்ரல் 1ஆம் தேதி மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.


அந்த அறிக்கையில், ஹிமாலயா வெல்னஸ் நிறுவம் தயாரிக்கும் பொருட்களை 100 நாடுகளுக்கு  மேலாக  ஏற்றுமது மற்றும் இறக்குமதி செய்து வருகிறது.  

இறக்குமதி செய்யும் நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுகொள்ள அந்நாடுகளின் சட்டங்கள் மட்டும் விதிமுறைகளை மதிக்க வேண்டும்.  சில நாடுகளில் ஹலால் சான்றுதல் கட்டாயம். எனவே அத்தகைய நாடுகளுக்கு மட்டும்  விதிமுறைகளின்படி ஹலால் சான்றுதல்கள் வழங்கப்படுகின்றது .மேலும், சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல் தவறானது என்றும், ஹிமாலயா தயாரிப்புகள் எதிலும் இறைச்சி இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தது.

மேலும், ஹலால் சான்றுதல் என்பது தயாரிக்கப்படும் பொருட்களில் விலங்கிலிருந்து பெறப்பட்ட இறைச்சி இருப்பதாகக் குறிக்கவில்லை என்றும், இறக்குமதி செய்யப்படும் நாடுகளும் விதிமுறைகளுக்கு ஏற்ப சைவ பொருட்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது. 


முடிவு:


நம் தேடலில், ஹலால் கொள்கைப் பற்றிய ஹிமாலய நிறுவனத்தின் பெயரில் பகிரப்படும் தகவல் தவறானது என்பதை அறியமுடிகிறது. 











பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க