YouTurn

பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்தி!

பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022 நவம்பர் 11 அன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க காத்திருந்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது.

பரவிய செய்தி

பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் மு க ஸ்டாலின். 2026 பாஜக திமுக கூட்டணி உறுதி. இனி காங்கிரசை நம்பி பயனில்லை உஷாரான அறிவாலயம் கும்பல்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடக்கவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


புகைப்படத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினோடு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருப்பதையும் காண முடிகிறது.




உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.



பரவி வரும் புகைப்படம் குறித்து மேலும் ஆய்வு செய்ததில், பாஜக மகளிரணி நிர்வாகி சேலம் நளினி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 2022-ல் பதிவிட்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் “நேற்று திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உலகத்தலைவர் மோடி அவர்களை வரவேற்பதற்காக காந்தி கிராம் பல்கலைகழகத்தில் மரியாதைக்குரிய அண்ணார் CPR, PONNAR அவர்களுடன் காத்திருந்த போது” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார். 



வைரல் புகைப்படத்தில், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் இருவரும் பச்சை நிறத்திலான அடையாள அட்டை போட்டுள்ளதை காண முடிகிறது. சேலம் நளினி ராமன் பதிவிட்டுள்ள புகைப்படத்திலும் அதே அடையாள அட்டைகளுடனும், அதே ஆடைகளுடனும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது.



எனவே 2022 நவம்பர் 11 அன்று காந்தி கிராம பல்கலைக் கழக விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வந்துள்ளாரா என்பது குறித்து தேடியதில், ANI இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை வரவேற்றதையும், நிகழ்வில் பிரதமர் மோடியுடன் இணைந்து அவர் கலந்துகொண்டதையும் உறுதி செய்ய முடிகிறது.



மேலும் ANI வெளியிட்டுள்ள புகைப்படத்தையும், வைரல் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து பார்த்ததில், முதல்வரின் பின்னால் நின்றிருந்த அவரது உதவியாளர் அணிந்திருந்த பேட்ச் மற்றும் பிரதமரை வரவேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி அணிந்திருந்த பேட்ச் ஆகியவை ஒத்து போகின.



இதன் மூலம், கடந்த 2022 நவம்பர் 11 அன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க காத்திருந்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் இது என்பதையும், இதனை கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று கூறி தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது. 


முடிவு:


நம் தேடலில், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று கூறி  பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.