YouTurn

ஆகஸ்ட் 2ம் தேதி நீளமான சூரிய கிரகணம் நிகழும் என்ற பரவும் செய்தி! உண்மை என்ன?

ஆகஸ்ட் 2ம் தேதி நீளமான சூரிய கிரகணம் நிகழும் என்ற பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணம் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் தெரியும். இது 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும். 1991க்குப் பிறகு பார்க்கக்கூடிய மிக நீண்ட நேர சூரிய கிரகணம் இதுவாகும்.

பரவிய செய்தி

2025 ஆகஸ்ட் 2 – பூமி இருளில் மூழ்கும் நாள் | நீளமான சூரிய கிரகணம்

image.png

Youtube Link | Archived Link

விரிவான விளக்கம்

"2025 ஆகஸ்ட் 2ம் தேதி, 21ம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் நிகழ உள்ளது. 6 நிமிடங்களுக்கும் மேலாக சூரிய ஒளி மறையப் போகும் இந்த அரிய தருணம், இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் காணக்கூடியது. பாதுகாப்பான கண்ணாடி அணிந்து இந்த அற்புத நிகழ்வை காணுங்கள்", என்று கூறி  சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன ?

பரவி வரும் இந்த செய்தி உண்மையா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது Economic Times ஊடகத்தில் ஜுலை 29 அன்று, “Solar Eclipse Rumors NASA Clarification: Will the world go dark on August 2, 2025 or 2027? See when will next total solar eclipse happen” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.  அதில் ஆகஸ்ட் 2, 2025 அன்று முழு சூரிய கிரகணம் ஏற்படும் என்று  பரவும் செய்திகளுக்கு நாசா மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த தேதியில் சூரிய கிரகணம் எதுவும் நிகழாது. மாறாக செப்டம்பர் 21, 2025 அன்று பகுதி சூரிய கிரகணம் நிகழும். இது முழுமையான இருளை ஏற்படுத்தாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடி பார்த்ததில், space. Com என்ற இணையதளப்பக்கத்தில் மே 11, 2024 அன்று, “Total solar eclipse 2027: A complete guide to the 'eclipse of the century'”  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஒரு கட்டுரை வெளியிடப்ப்ப்பட்டிருந்தது. அதில் மேலும் ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணம் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் தெரியும். இது 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும். 1991க்குப் பிறகு பார்க்கக்கூடிய மிக நீண்ட நேர சூரிய கிரகணம் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் ஜுலை 24, 2025 அன்று space. Com இணையதளப்பக்கத்தில் வெளியான கட்டுரையிலும்,  வரும் ஆகஸ்ட்  2ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும் என்று பரவும் தகவல் தவறானது என்றும், ஆனால் ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணம் நிகழும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், ஆகஸ்ட் 2, 2027 தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 2, 2025 அன்று முழு சூரிய கிரகணம் ஏற்படப்போவதாகக் கூறி பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருவது தெரியவந்தது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க