யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இதற்கு முன்பும் “தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வர வேண்டும், தமிழ்நாட்டை மாற்ற வேண்டும், விவசாயிகள் வாழ்கையை உயர்த்த வேண்டும். அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது. தமிழ்நாட்டின் கல்வி தரம் மாற வேண்டும், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், “தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். ஆனால் விஜய் தெலுங்கர்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகக் கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது போலியான செய்தி என்பது உறுதியானது.
“தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். ஆனால் விஜய் தெலுங்கர்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளாரா என்பது குறித்து, ஏ.ஆர்.ரகுமானின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், இது குறித்து அவர் எந்த செய்தியும் கூறவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து தேடியதில், ஏ.ஆர்.ரகுமான் “News18 Tamil Nadu” ஊடகத்திற்கு கடந்த 2017-ல் அளித்த பேட்டி ஒன்று கிடைத்தது. அதில், “விவசாயிகள், நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி பற்றி வினவிய போது, தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர் ஒருவர் வர வேண்டும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளாமல் தடுக்க வேண்டும், தமிழ்நாட்டின் கல்வித் தரம் உயர வேண்டும், தமிழ்நாடு கிளாசிக் ஆகணும் , தமிழன் உலகை ஆள வேண்டும்” என்றுக் கூறியுள்ளதைக் காண முடிந்தது.
இது குறித்தும் ஏற்கனவே கடந்த 2017-ல் நம் யூடர்ன் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழன் உலகை ஆள வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் கருத்து
இதன் மூலம், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று ரகுமான் கூறியது உண்மையே, ஆனால் தற்போது “தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ஆனால் விஜய் தெலுங்கர்” என்று அவர் கூறியதாகப் பரவும் செய்திகள் போலியானவை என்பதை தெளிவுபடுத்த முடிகிறது.

முடிவு:
நம் தேடலில், "தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ஆனால் விஜய் தெலுங்கர்” என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.
