யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது உண்மையான வீடியோ அல்ல. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான வீடியோவை, உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையில் உள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
உலகின் மிகப் பெரிய பழுத்த பலாப்பழம் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில்.. 240 கிலோ..
விரிவான விளக்கம்
உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ளது, இதன் எடை 240 கிலோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில், மரத்தின் அடியில் இருக்கும் ஒரு ராட்சச பலாப் பழத்தை ஒரு கூட்டத்தினர் நகர்த்துவதையும், அங்கு உள்ள ஒரு பலகையில் கேகாலை என்று எழுதப்பட்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
“உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ளது, இதன் எடை 240 கிலோ” என்று பரவும் இதன் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான் வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து அறிய பரவி வரும் செய்தி குறித்து சர்வதேச அளவில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்தோம். ஆனால் எந்த ஊடகங்களிலும் செய்தி வெளிவராததால், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பதை உறுதிபடுத்த, “Hive Moderation” இணையதளத்தில் பரவி வரும் வீடியோவை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம்.
ஆய்வின் முடிவில் இது 98.6% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்று உறுதிபடுத்தியது. இதன் மூலம் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் இதை சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையில் உள்ளதாகக் கூறி பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று உறுதியாகிறது.