YouTurn

கடலுக்கடியில் ராமர் சேது பாலம் என்று பரவும் AI வீடியோ!

கடலுக்கடியில் ராமர் சேது பாலம் என்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ராமர் சேது பாலம் கடலுக்கு அடியில் இருப்பதைப் பாருங்கள் என்று கூறி 1:09 நிமிடங்கள் கொண்ட AI வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

இந்து மதமே இல்லைனு சொல்றவங்க .ராமாயணம் ஒரு கட்டுக்கதைனு சொல்றவங்களுக்கு  இது சமர்ப்பணம்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

ராமர் சேது பாலம் கடலுக்கு அடியில் இருப்பதைப் பாருங்கள் என்று கூறி 1:09 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் வீடியோவில் ஸ்கூபா டைவிங் (Scuba Diving) செய்யும் சிலர் கடலுக்கு அடியில் சென்று ஒரு பாலத்தைக் காண்பதையும், பாலத்தைப் போன்றே பல வரலாற்றுச் சின்னங்கள் கடலுக்கடியில் இருப்பதையும் காண முடிகிறது. 


Content not available.


Content not available.


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப்பார்த்ததில், இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


bharathfx1” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பரவி வரும் வீடியோ முதன்முதலில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பதிவில் இது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்ததையும் காண முடிகிறது. 


https://www.instagram.com/p/DHs_T72tbsf/


எனவே இது உண்மை தானா என்பதை அறிய, பரவி வரும் வீடியோவை “Hive Moderation” இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில் ராமர் சேது பாலம் என்று பரவி வரும் இந்த வீடியோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த முடிந்தது.



முடிவு: 


நம் தேடலில், கடலுக்கடியில் ராமர் சேது பாலம் என்று கூறி பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க