யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அரசு பள்ளி உடை அணிந்த சிலர், சினிமா பாடல் ஒன்றிற்கு மேடையில் நடனமாடுவதை தெளிவாகக் காண முடிகிறது.
பரவிய செய்தி
அரசுப் பள்ளியில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி..! பெற்றோர்களே உஷார். திமுக ஆட்சியில் பிள்ளைகளைப் பெத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க. திமுக அப்பாவ வாழ்த்துறாங்க. ஒரு சினிமா ரசிகர் மன்றத் தலைவன் கல்வி அமைச்சராக இருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்தில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவச் செல்வங்கள் எப்படியாவது நாசமா கெட்டு ஒழிந்து போகவேண்டும் என்று சிந்திக்கிறான் திமுக காரன். மக்களே! உங்கள் பிள்ளைகள் நல்வாழ்வு உங்கள் கையில்தான் உள்ளது🙏🙏🙏 கவனமாக இருங்கள்..

விரிவான விளக்கம்
திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அரசு பள்ளி உடை அணிந்த சிலர், சினிமா பாடல் ஒன்றிற்கு மேடையில் நடனமாடுவதை தெளிவாகக் காண முடிகிறது.
மேலும் பரவி வரும் பதிவில் “அரசுப் பள்ளியில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி..! பெற்றோர்களே உஷார். திமுக ஆட்சியில் பிள்ளைகளைப் பெற்றவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு சினிமா ரசிகர் மன்றத் தலைவன் கல்வி அமைச்சராக இருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்தில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவச் செல்வங்கள் எப்படியாவது நாசமாக கெட்டு ஒழிந்து போகவேண்டும் என்று சிந்திக்கிறான் திமுக காரன். மக்களே! உங்கள் பிள்ளைகள் நல்வாழ்வு உங்கள் கையில்தான் உள்ளது. கவனமாக இருங்கள்“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் நடந்த "ஆடலும் பாடலும்"* நிகழ்ச்சி..!🖤♥️@annamalai_k
#திருட்டு_திமுக ஆட்சியில் பிள்ளைகளைப் பெத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க pic.twitter.com/FqZjuoRBd6
பெற்றோர்களே உஷார்
அரசுப் பள்ளியில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி.
பெற்றோர்களே உஷார்
திமுக ஆட்சியில் பிள்ளைகளைப் பெத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க
திமுக அப்பாவ வாழ்த்துறாங்க.
ஒரு சினிமா ரசிகர் மன்றத் தலைவன் கல்வி அமைச்சராக இருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்தில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.😭 pic.twitter.com/aZOFMbW83Y
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ அரசு பள்ளியில் தான் எடுக்கப்பட்டதா, எந்த அரசு பள்ளியில் எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிய பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். “𝐏𝐮𝐝𝐮𝐠𝐚𝐢 𝐩𝐮𝐠𝐚𝐥 𝐩𝐫𝐞𝐦” என்ற யூடியூப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. இந்த யூடியூப் பக்கம் முழுவதும் ஆடல் பாடல் நிகழ்ச்ச்சிகளின் வீடியோக்களே இடம் பெற்றிருந்தன.

இந்த யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோ, மார்ச் 05 அன்று “கண்ணழகா காலழகா.. சாங் | 3 movie சூப்பர் 💚💥டான்ஸ் | டைட்டானிக்- வெள்ளலூர் 2025 “ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. வீடியோவில், “டைட்டானிக் குழுவினரின் நடன நிகழ்ச்சி” என்று பேனர் கட்டப்பட்டிருப்பதையும் அதில் காண முடிகிறது.
இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் பள்ளி சீருடை அணிந்து திரைப்பட பாடலுக்கு நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் மேடையின் பின்புறம் உள்ள “டைட்டானிக் குழுவினரின் நடன நிகழ்ச்சி” என்ற பேனரும், நடன நிகழ்ச்சி நடைபெற்ற முழு மேடையும் தெரியாதவாறு வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் தான் பரவி வரும் வீடியோவை அரசுப் பள்ளியில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்று கூறி, பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் அரசுப் பள்ளியில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்று பரவும் காணொளி முற்றிலும் தவறானது என்பது உறுதியாகிறது.