யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை “இறந்த பிரிட்டிஷ் காவல்துறையைச் சேர்ந்த நாய்க்கு, மற்ற நாய்கள் மரியாதை“ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
Last rites of British Police Dog MPW. Watch the sentiments expressed by other dogs of the Police force ("colleagues")

விரிவான விளக்கம்
பிரிட்டிஸ் காவல்துறையை சேர்ந்த நாய்கள் மற்றொரு நாயின் மரணத்திற்காக அழுவதும், காவல்துறை அதிகாரிகள் அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதும் போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
👇Last rites of British Police Dog MPW. Watch the sentiments expressed by other dogs of the Police force ("colleagues") 👍🤔 pic.twitter.com/Ml9VT4NarM
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது mamapapawowo யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ செப்டம்பர் 22, 2025 அன்று ”goodbye Zac, remembrance of a true hero” என்ற தலைப்பில் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.

அந்த வீடியோவின் Discription-ல் ”இது AI மூலம் உருவாக்கிய வீடியோ என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும், இந்த வீடியோவுக்காக உண்மையான நாய்க்குட்டிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கூடுதலாக அந்த யூடியூப் பக்கத்தின் BIOவை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் “நான் AI பயன்படுத்து வீடியோக்களை உருவாக்குகிறேன். எனது வீடியோக்களில் உள்ள பெரும்பாலான காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்த, பரவி வரும் வீடியோவின் screenshotகளை HIVE MODERATION இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ, 98.2% AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது.

முடிவு:
இறந்த பிரிட்டிஷ் காவல்துறையைச் சேர்ந்த நாய்க்கு, மற்ற நாய்கள் மரியாதை செலுத்துவதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையான வீடியோ என்று பலரும் தவறாக பரப்பி வருகின்றனர்.