யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மதுரை பாட்டி செய்த ஆர்கானிக் ரயில் எனப் பரவும் புகைப்படம் உண்மையானது அல்ல, இது AI புகைப்படம்.
பரவிய செய்தி
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆர்கானிக் ரயில் செய்து பாட்டி சாதனை. மதுரையில் வசித்து வரும் சக்தி அம்மாள் என்கின்ற இந்த பாட்டி தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர். வீட்டில் மீதமாகும், காய்கறிகளைக் கொண்டு இந்த ஆர்கானிக் ரயில் வடிவமைத்திருக்கிறார். இதில் ஒரே சமயத்தில். 200800 பேர் போகலாம். இதன் வேகம், மணிக்கு 4000 கி.மீ. பசித்தால் ரயிலில் எந்த பாகத்தை வேண்டுமானாலும் கொஞ்சம் பிய்து சாப்பிடலாம். பிய்த்த பகுதி தன்னால் வளர்ந்து விடும். ஏனென்றால் இது முழுக்க முழுக்க வெஜிடபிளால் செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ். விஞ்ஞானிகள் இந்த ரயிலுக்கு வந்தே பாரத் - ஆர்கானிக் என்று பெயர் வைத்துள்ளனர். பாட்டி அம்மாவிடம் கேட்கும் போது, மேக் இன் இந்தியா திட்டம் தன் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்ததாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், அடுத்து ஆர்கானிக் விமானம் தான் பேராண்டி என்றார்.
பாட்டியின் கண்டுபிடிப்பு பிடித்திருந்தால் ஒரு ஹார்டின் போடவும்.
விரிவான விளக்கம்
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மதுரையை சேர்ந்த சக்தி அம்மாள் என்ற பாட்டி ஆர்கானிக் ரயில் செய்து அசத்தியுள்ளதாகக் கூறி, புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் நையாண்டியாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில் இதுகுறித்து எந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரவில்லை என்பதை அறியமுடிந்தது. மேலும் பரவி வரும் புகைப்படத்தை நன்கு ஆய்வு செய்ததில், பல மனிதர்களின் தோற்றங்களில், AI மூலம் உருவாக்கப்பட்டது போல, சில மாறுபாடுகள் இருப்பதையும் காணமுடிந்தது.

எனவே இது உண்மையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம் தானா என்பது குறித்து அறிய hivemoderation இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வுசெய்து பார்த்தோம்.. இந்த புகைப்படம் 99.8% செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கபட்டதுதான் என்பதை உறுதிசெய்ய முடிந்தது.

முடிவு: நம் தேடலில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆர்கானிக் ரயில் செய்து அசத்திய மதுரை பாட்டி என நையாண்டியாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறியமுடிகிறது.
