யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்ததாகக் கூறி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது போன்று பரவும் புகைப்படம் போலியானது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்தார் என்று கூறி, தோனி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஊடகங்களில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்தது குறித்து எந்த ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்படவில்லை. மேலும் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடப்படவில்லை.
எனவே பரவி வரும் புகைப்படத்தை நன்கு ஆய்வு செய்ததில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே இதை “Hive Moderation“ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம்.
ஆய்வின் முடிவில் இது 97.5% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது.
மேலும் படிக்க: உலகின் மிகப் பெரிய பலாப்பழம் எனப் பரவும் AI வீடியோ!
இதற்கு முன்பும் AI புகைப்படங்களை உண்மையான புகைப்படங்கள் என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பினர். அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: நடுரோட்டில் குழந்தையைக் காப்பாற்றிய மயில் எனப் பரவும் AI வீடியோ!
முடிவு:
நம் தேடலில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்தார் என்று கூறி, தோனி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது போன்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது.