YouTurn

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியரின் கொடூர செயல் எனப் பரவும் எகிப்து வீடியோ!

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியரின் கொடூர செயல் எனப் பரவும் எகிப்து வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ‘ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின்’ இதயமற்ற செயல் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல.

பரவிய செய்தி

இது ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

“ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல்”  என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. இதனை வலதுசாரிகள் பலரும் தங்கள் சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பி வருகின்றனர். 




உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குறித்து கடந்த 2019-ல் இருந்தே பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. 


மேலும் தேடியதில், இது குறித்து “BBC News” கடந்த 2014 செப்டம்பர் 10 அன்று “எகிப்து அனாதை இல்ல காணொளி: குழந்தைகளை அடித்ததற்காக மேலாளருக்கு சிறைத்தண்டனை” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “கிசாவில் உள்ள மெக்கா அனாதை இல்லத்தில் நடந்த தாக்குதல்களின் காணொளி, அவரது மனைவியால் படம்பிடிக்கப்பட்டு கடந்த மாதம் (2014 ஆகஸ்ட்) ஆன்லைனில் வெளியிடப்பட்டது. குழந்தைகளை குச்சியால் அடிப்பதைக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து, ஒசாமா முகமது ஓத்மான் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது ” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதே போன்று “Egyptian Streets” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலும், இது எகிப்து நாட்டில் உள்ள கிசாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், வீடியோவில் குழந்தைகளை கொடூரமாக தாக்கியவர் பெயர் ஒசாமா முகமது ஓத்மான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



முடிவு:


நம் தேடலில், ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ‘ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின்’ இதயமற்ற செயல் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க