யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கிய ABVP சங்கிகள் தாக்குதல்’ எனப் பரவும் இந்த செய்தியில் “This Might Be sattire” என்று இடம்பெற்றிருப்பதன் மூலம், நையாண்டி செய்யும் நோக்கில் இது பதிவிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
பரவிய செய்தி
அடப்பாவிகளா.. ஏபிவிபி சங்கிகள் சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதாகக் கூறி மிருகக் காட்சி சாலையைத் தாக்கினர். இதெல்லாம் உலகில் வேறு எங்காவது நடக்குமா...சங்கி முட்டாள்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்.

விரிவான விளக்கம்
சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதைக் கண்டித்து ஏபிவிபி அமைப்பினர் மிருகக் காட்சி சாலையைத் தாக்கினர் எனக் கூறி “The Savala Vada” என்கிற பெயரில் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், “The Savala Vada” என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே புகைப்படம் பிப்ரவரி 28 அன்று பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.....
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
‘சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதற்காக மிருகக் காட்சி சாலை மீது ABVP அமைப்பினர் தாக்குதல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த செய்தியில் “This Might Be sattire” என்று இடம்பெற்றிருப்பதன் மூலம், நையாண்டி செய்யும் நோக்கில் இது பதிவிடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. மேலும் "The Savala Vada" என்கிற இதன் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தபோது, இதே போன்று பல்வேறு நையாண்டி அரசியல் செய்திகள் அதில் பதிவிடப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

பரவி வரும் செய்தி குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், சிவராத்திரி அன்று ABVP நிர்வாகிகள் புது தில்லியில் தகராறு செய்தது குறித்து Deccan Herald, பிப்ரவரி 26 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், டெல்லியில் உள்ள செளத் ஏசியன் பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறியதற்காக அங்குள்ள பெண்கள் உட்பட மாணவர்களை, ABVP அமைப்பினர் உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், உணவக ஊழியர்களைக் கூட அவர்கள் தாக்கியதாகவும் SFI அமைப்பு குற்றம் சாட்டியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் புதுதில்லியில் உள்ள செளத் ஏசியன் பல்கலைக்கழகத்தில் சிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கபட்டதற்காக ABVP அமைப்பினர் தகராறு செய்த சம்பவத்தை கிண்டல் செய்யும் நோக்கிலேயே “The Savala Vada” ‘சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியவர்கள் மீது ABVP சங்கிகள் தாக்குதல்’ எனக் குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என்பது உறுதியாகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை அறியாமல் பலரும், இந்த செய்தியை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், ‘சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியவர்கள் மீது ABVP சங்கிகள் தாக்குதல்’ எனப் பரவும் இந்த செய்தி நையாண்டி செய்யும் நோக்கில் பதிவிடப்பட்டது என்பது உறுதியாகிறது.