யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ நெல்லையில் எடுக்கப்பட்டதல்ல. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நெல்லையில் பொது வெளியில் அமர்ந்து சீருடையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் அதில் பள்ளிக்கல்வித்துறையை முற்றிலும் சீர் அழித்த திமுக அரசு என்றும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது விகடன் ஊடகத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படத்துடன் பிப்ரவரி 20, 2020 அன்று, ”`காட்டுப்பகுதியில் மதுகுடிக்கும் மாணவிகள்!'- அரியலூர் சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு மூவர் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு மதுபானத்தை குடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்து தேடியப் போது, ”அரியலூர் பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் பழைய விடியோவை வலைதளத்தில் பதிவு செய்த பாஜகஒன்றிய நிர்வாகி கைது” என்ற தலைப்பில் News Tamil 1 ஊடகத்தில் 28 ஜூலை, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 2020ஆம் ஆண்டு அரியலூரில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ அன்றைய காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதே காட்சியை ‘திராவிடம் வளர்தெடுத்த பெரியாரின் பேத்திகள்’ என்று குறிப்பிட்டு பாஜக ஒன்றிய நிர்வாகி முத்துகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அரியலூர் மாவட்ட திராவிட கழக மகளிர் அணி பொறுப்பாளர் மருவத்தூர் ராதிகா செந்தில்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாஜக ஒன்றிய நிர்வாகி கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோ நெல்லையில் எடுக்கப்பட்டதல்ல. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
