யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி” என்று குறிப்பிட்டு பரவி வரும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
13 ஆண்டுகளில் 21 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரியத்தில் சேர்ந்துள்ளது.. திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி
விரிவான விளக்கம்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், நடைமுறையிலிருக்கும் சட்டத்தில் 40 திருத்தங்களை மேற்கொண்டு வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்நிலையில், “13 ஆண்டுகளில் 21 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரியத்தில் சேர்ந்துள்ளது. திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி” என்று தலைப்பிடப்பட்ட செய்தித்தாள் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் செய்தித்தாளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். ஆனால் இது எந்த செய்தித்தாள் என்பது குறித்த விபரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்தோம். “The Print“ ஊடகப் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 12 அன்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா பேசியது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அச்செய்தியில், “கடந்த மாதம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில், "1,500 ஆண்டுகள் பழமையான திருச்செந்துறை கோயிலுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்செந்துறை கோயிலுக்கு என்று அவர் கூறியதை, திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான நிலம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் திருச்செந்துறை ஊரில் உள்ள சொத்துக்கள் 18 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் வம்சத்தின் ராணியான ராணி மங்கம்மாளால் முஸ்லிம் பயனாளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், அதன்படி, 1964 ஆம் ஆண்டில், இந்த சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்கு மாற்றப்பட்டதாகவும் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிய அரசின் அதிகாரப்பூரமான "Press Information Bureau" பக்கத்திலும் கூட, திருச்செந்துறை கோயிலுக்கு பதிலாக திருச்செந்தூர் கோவில் என்று குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், “திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி” என்று குறிப்பிட்டு ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பது திருச்செந்துறை கோயில் என்பதையும், இது திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது என்று தவறாகப் பரப்பப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.