YouTurn

மாடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ !

மாடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மாடுகளை வைத்து போராட்டம்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தற்போது விவசாயிகள் மாடுகளை வைத்து போராட்டம் செய்வதாகக் கூறி, 27 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், நூற்றுக்கணக்கான மாடுகள் சாலையில் வரிசையாக வருவது போன்றும், முன் வரிசையில் சிலர் கம்புகளுடன் மாடுகளுக்கு பாதுகாப்பாக நடந்து வருவது போன்றும் உள்ளது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

அந்தப் பதிவில், "நிஹாங் பாபா பாலா சிங் அவர்கள், "கயான் வாலா பாபா" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் 6000க்கும் மேற்பட்ட தெரு மாடுகளை பராமரித்து வந்தார். இவர் நிஹாங் சிங்கின் 'தர்னா தள' பிரிவைச் சேர்ந்தவர். பாபா ஜி 2018 இல் காலமானார், ஆனால் அவரது பிரிவைச் சேர்ந்த நிஹாங்காக்கள் இன்னும் 6000க்கும் மேற்பட்ட பசுக்களை அமிர்தசரஸ் அருகே உள்ள பாபா பகாலா சாஹிப்பில் கவனித்து வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது. 



இது குறித்து தேடியதில், "Indian Express" கடந்த 2018-ல் "பஞ்சாப்: மந்தையை விட்டு வெளியேறிய 6000 கால்நடைகளுக்காகவே வாழ்ந்தவர்" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பஞ்சாபில் கயான்-வாலா பாபா என்று அழைக்கப்பட்ட பாபா பாலா சிங், தான் பாதுகாத்து வந்த 6,000 கால்நடைகளை தனியாக விட்டுவிட்டு, தன்னுடைய 50 வது வயதில் காலமாகிவிட்டார். 6,000 கால்நடைகளில் பெரும்பாலனவை பசுக்கள் மற்றும் காளைகளே. தெரு விலங்குகளுக்காக ஒரு சிறிய மருத்துவமனையையும் நடத்தி வந்துள்ளார். பாபா பாலா விட்டுச் சென்ற இந்த மந்தையின் பொறுப்பை யார் எடுப்பது என்பது இன்னும் 'தர்ணா தளம்' முடிவு செய்யவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் பரவி வரும் வீடியோ, பஞ்சாபில் கயான்-வாலா பாபா என்று அழைக்கப்பட்ட பாபா பாலா சிங் என்பவர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த மாடுகளை, அவருடைய சீடர்கள் சாலைகளின் வழியே அழைத்து சென்ற போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. இதனை விவசாயிகள் போராட்டம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டத்தில் கோயில்களை தாக்குவதாக தவறாகப் பரவும் 2022ல் நடந்த பஞ்சாப் கலவர வீடியோ !

முடிவு:

நம் தேடலில், மாடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் செய்வதாகப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், இந்த வீடியோ கடந்த 2022ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க