YouTurn

ஹரியானாவில் பாஜக வேட்பாளரை பொது மக்கள் விரட்டியடித்ததாகப் பரவும் தவறான தகவல்!

ஹரியானாவில் பாஜக வேட்பாளரை பொது மக்கள் விரட்டியடித்ததாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஹரியானா பாஜக வேட்பாளர் கல்லால் அடித்து ஓட ஓட விரட்டிய பொது மக்கள் 


X link

விரிவான விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஹரியானா பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொது மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று திமுகவினரால் பரப்பப்படுகிறது. 



இதே வீடியோவை காங்கிரஸ் கட்சியின் ஜார்கண்ட் மாநிலம் எக்ஸ் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சிர்சா (Sirsa) மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அசோக் தன்வாரை பொது மக்கள் விரட்டியடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன? 

பரவக் கூடிய வீடியோவில் ’SIRSA’ என்கிற பெயரும் ‘Bharat News’ என்ற லோகோவும் இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், இதன் முழு வீடியோவை Pahredar Bharat News’ என்ற யூடியூப் பக்கத்தில் 2021, ஜூலை 11ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பில் துணைச் சபாநாயகர் ரன்பீர் கங்வாவின் காரை விவசாயிகள் உடைத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேற்கொண்டு இது பற்றித் தேடியதில், இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வேறொரு வீடியோவுடன் ‘News 24’ என்ற ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஒன்றிய பாஜக அரசு 2020ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன் ஒரு பகுதியாக 2021, ஜூலை மாதம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. 



அப்போராட்டத்தின் போது அம்மாநில சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகர் ரன்பீர் கங்வாவின் (பாஜக) கார் கண்ணாடிகளை விவசாயிகள் உடைத்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக சிர்சா தொகுதியில் ரன்பீர் கங்வா  போட்டியிடவில்லை. 

மேற்கொண்டு காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அசோக் தன்வார் பற்றியும் தேடினோம். ஆம் ஆத்மி கட்சியிலிருந்த இவர் கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக சார்பில் சிர்சா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். 

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் தன்வார் தன்னை பற்றி தவறான தகவலுடன் வீடியோ பரப்பப்படுகிறது என்றும் இது குறித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



இவற்றில் இருந்து இது 2021ல் பாஜகவைச் சேர்ந்த ரன்பீர் கங்வாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வீடியோ என்பதையும் அவர் தற்போது பாஜக சார்பில் சிர்சா தொகுதியில் போட்டியிடவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. 

முடிவு : 

ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் பொது மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2021ம் ஆண்டு பாஜகவைச் சேர்ந்த ரன்பீர் கங்வாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க