YouTurn

திமுக ஆட்சியில் அரசு பேருந்தில் பின் சக்கரங்கள் குறைவாக உள்ளதாகப் பரவும் 2019ல் எடுத்த வீடியோ !

திமுக ஆட்சியில் அரசு பேருந்தில் பின் சக்கரங்கள் குறைவாக உள்ளதாகப் பரவும் 2019ல் எடுத்த வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எப்படி அரசு பணத்தை மிச்சம் பண்ணி மக்களுக்கு ஸ்டாலின் அரசு நல்லது செய்றாங்க பாருங்க. பின்னாடி 4 டயர் இருக்க வேண்டிய இடத்தில 2டயர். வாரே வாவ். மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து கற்று கொள்ள வேண்டும்..

X Link

விரிவான விளக்கம்

திராவிடமாடல் அரசு பேருந்தைப் பாருங்கள், பின்னால் இரண்டு சக்கரங்கள் குறைவாக உள்ளன என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், பேருந்திற்கு பின்னால் "பொள்ளாச்சி-திருப்பூர், வழி பல்லடம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

இதன் முழு வீடியோ, கடந்த 2019 ஜூலை 01 அன்று Jeno Cryspin என்ற யூடியூப் பக்கத்தில் "மக்களின் உயிருக்கு ஆபத்து, அரசு பேருந்தில் 4 சக்கரங்களுக்கு பதிலாக இரண்டு சக்கரங்களே உள்ளன. இரண்டு சக்கரங்களைக் காணவில்லை" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ கடந்த அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.



இது குறித்து, 2019 ஜூலை 02 அன்று "The Hindu" தனது பக்கத்தில் வெளியான செய்தியில், "நான்கு சக்கரங்களுக்குப் பதிலாக இரண்டு பின் சக்கரங்கள் மட்டுமே கொண்ட அரசுப் பேருந்தின் வீடியோ கிளிப் ஞாயிற்றுக்கிழமை வைரலானதை அடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (டிஎன்எஸ்டிசி) மூத்த அதிகாரி ஒருவரை திங்கள்கிழமை தொடர்புகொண்டு பேசினோம். பதிலளித்த அவர், பேருந்தில் பயணிகள் இல்லை என்றும், அந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மட்டுமே இருந்ததாகவும், செயல்பாடாமல் இருக்கும் பழைய பேருந்துகளை நிறுத்தும், மேட்டுப்பாளையத்தின் பேருந்து முனையத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று, DTnext வலைதள பக்கத்திலும் பரவி வரும் இதே புகைப்படத்தை குறிப்பிட்டு கடந்த 2019 ஜூலை 02 அன்றே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் கயிற்றால் கட்டப்பட்ட அரசு பேருந்து எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !

மேலும் படிக்க: தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!

முடிவு:

நம் தேடலில், திமுக ஆட்சியில் அரசு பேருந்தில் இரண்டு பின் சக்கரங்களே உள்ளன எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இது கடந்த 2019ன் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க