YouTurn

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகப் பரவும் பழைய செய்தி!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகப் பரவும் பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

பரவிய செய்தி

மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல். திமுக ஆளும் கட்சி. இப்போது இதே காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணிப்பாரா திரு எடப்பாடி பழனிச்சாமி.. அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவ்வை சண்முக சாலையில் எம்ஜிஆர் மாளிகையில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட்டார்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ளதாகக் கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

பரவி வரும் பதிவுகளில், “மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல். திமுக ஆளும் கட்சி. இப்போதும் இதே காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணிப்பாரா திரு எடப்பாடி பழனிச்சாமி?” என்று அதிமுகவை விமர்சித்து குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. 



உண்மை என்ன? 

பரவி வரும் செய்திகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வுசெய்து பார்த்ததில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ளதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ததில், நியூஸ்18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில், “டிசம்பர் 27, 30-ல் உள்ளாட்சித் தேர்தல் | TN By Election 2019 Dates“ என்று குறிப்பிட்டு கடந்த 2019ஆம் ஆண்டில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.  அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சரியாக 7:29 நிமிடத்தில் பரவி வரும் நியூஸ் கார்டு இடம் பெற்றிருந்ததை தெளிவாகக் காண முடிந்தது.


இதன்மூலம் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியை தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்தி என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்பதை அறியமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.