YouTurn

தினத்தந்தி வெளியிட்ட செய்தி எனப் பரவும் 2018ல் வெளியான பழைய செய்தி!

தினத்தந்தி வெளியிட்ட செய்தி எனப் பரவும் 2018ல் வெளியான பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த இரண்டு செய்திகளும் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியானவை ஆகும்.

பரவிய செய்தி

தமிழகம் வளர்ச்சி பாதையில்


image.png

X Link

விரிவான விளக்கம்

"10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும் மற்றும் ஊரகப்பகுதியில் 815 மது கடைகளைத் திறக்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி", என தினத்தந்தி வெளியிட்ட இரண்டு செய்திதாள்களை பதிவிட்டு தமிழக வளர்ச்சி பாதையில் என நக்கல் செய்யும் விதமாக பரப்பி வருகின்றனர்.


உண்மை என்ன ?


பரப்பப்படும் இந்த செய்தித்தாள் புகைப்படத்திலே வெளியான தேதி 2018ஆம் ஆண்டு மே மாதம் என்று தெளிவாகத்தெரிகிறது.


இதன் முழுவிவரம் குறித்தது பரவிவரும் செய்தித்தாளின் தலைப்பினை வைத்து தேடியதில் தினதந்தி இணையதளப்பக்கத்தில் 2018 மே 22 தேதியில் இதன் முழு செய்தியை பார்க்க முடிந்தது.

image.png


அதில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.


இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.


மேலும், பரவி வரும் மற்றோரு செய்தி சம்மந்தமாக ஆராய்ந்ததில் மே 24, 2018 செய்தி வெளியாகி உள்ளது .


image.png


இவ்விரு செய்திகளும் 2018ல் வெளியானவை அன்றைய காலக்கட்டத்தில் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்தது குறிப்பிடத்தக்கது.


முடிவு:

நம் தேடலில், இந்த இரண்டு செய்திகளும் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியானவை ஆகும். இதனை மறைத்து தற்போது நடந்ததுபோல் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க