யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மாநாட்டில் அனைத்து உணவு வகைகளும் விறகு அடுப்புகள் மூலமாகவே சமைக்கப்பட்டது. இது குறித்தான பல வீடியோக்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதை மறைத்து மாநாட்டில் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டதாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திருட்டு திராவிடியா திமுக மாடல் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட திருச்சி திமுக மாநாட்டில் உணவு தயாரிக்க 12000 சிலிண்டர்கள் வீணடிப்பு..
சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் இது தேவையா?

விரிவான விளக்கம்
திருச்சியில் உள்ள சிறுகனூரில் தி.மு.க சார்பில், 'ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க மாநில மாநாடு மார்ச் 09, 2026 அன்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த மாநாட்டில் உணவு தயாரிக்க 12 ஆயிரம் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் திமுக மாநாட்டில் சமையல் கூடம் குறித்த வீடியோக்கள் ஏதேனும் ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ANI ஊடகத்தில் மார்ச் 09 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் திருச்சியில் நடைபெற உள்ள திமுக 12வது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கான உணவு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 1100 தன்னார்வலர்கள் உணவு சமைத்து, தொண்டர்களுக்கு பேக் செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டு, ஒரு வீடியோவை பதிவிட்டுருந்தனர்.
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: Food preparations are underway for the DMK cadres who will attend the 12th State Conference of the Dravida Munnetra Kazhagam (DMK), scheduled to be held in Trichy today. 1100 volunteers are cooking food and packing for the cadres.
The… pic.twitter.com/n6ou1JhI6b
அந்த வீடியோவில் அனைத்து உணவு வகைகளும் விறகு அடுப்புகள் மூலமாகவே சமைக்கப்பட்டதை தெளிவாக பார்க்கமுடிந்தது.
இதே போன்று வேறு ஏதேனும் ஊடகத்தில் செய்தி வெளியாகவுள்ளதா என்பதை தேடினோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தில் திமுக மாநாட்டில் பங்கேற்க வருவோருக்காக தடபுடலாகத் தயாராகும் மதிய உணவு என்று குறிப்பிட்டு செய்தியாளர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில் உணவு வகைகள் அனைத்து விறகு அடுப்புகள் மூலமாகவே சமைக்கப்பட்டது தெரியவந்தது.
முடிவு:
எனவே, திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் உணவு தயாரிக்க 12,000 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவுவது பொய்யான தகவலாகும். மாநாட்டில் அனைத்து உணவு வகைகளும் விறகு அடுப்புகள் மூலமாகவே சமைக்கப்பட்டது.