தலைமைப் பொறுப்புகளில் குறைவாக உள்ள இந்தியப் பெண்களின் பங்கு... காரணம் என்ன? அலசும் லிங்க்ட்இன் அறிக்கை!

வணிகம் சார்ந்த சமூக ஊடகத்தளமாக செயல்படும் லிங்க்ட்இன் (LinkedIn) "கார்ப்பரேட் இந்தியாவின் தலைமைப் பதவிகளில் பெண்கள்" என்ற தலைப்பில் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லிங்க்ட்இன் (LinkedIn) உடன் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பொதுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான "The Quantum Hub" நிறுவனமும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1 பில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள், 41,000 திறன்கள் (Skills), 68 மில்லியன் நிறுவனங்கள் மற்றும் 1,35,000 பள்ளிகளில் பெறப்பட்ட சுயஅறிக்கை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. உதாரணமாக, பிப்ரவரி 2024 நிலவரப்படி, இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில், NSE-1000 குறியீட்டில் உள்ள 54 நிறுவனங்களில் ஒரு பெண் CEO கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்கு 30%க்கும் குறைவாகவே உள்ளது!
அறிக்கையின்படி ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2016ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை 30% சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக உயர் தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 19% சதவிகிதத்தைக்கூட தாண்டவில்லை என்பதே உண்மை.
ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதித்துவம் 2016ஆம் ஆண்டு 23.9% சதவிகிதத்தில் இருந்து 2024ஆம் ஆண்டு 26.8% சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான தரவு ஜனவரி மாதம் வரை மட்டுமே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று உயர் தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பொறுத்தவரையில், 2016ஆம் ஆண்டில் 16.6% சதவிகிதத்தில் இருந்து 2024ஆம் ஆண்டில் இது 18.3% சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தலைமைப் பணிகளில் அமர்த்தப்பட்ட பெண்களின் பங்கு:
தலைமைப் பணிகளில் பணியமர்த்தப்பட்ட பெண்களின் பங்கு 2016ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டு இடைப்பட்ட காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது 2016ஆம் ஆண்டு 18.8% சதவிகிதத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு 19.2% சதவிகிதமாகவும், 2018ஆம் ஆண்டு 20.4% சதவிகிதமாகவும் படிப்படியாக உயர்ந்துள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டில் 25.2% சதவிகிதமாக ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. இருப்பினும் 2022ஆம் ஆண்டிலிருந்து இந்த விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது.
படிநிலை வாரியாக மேற்பதவியில் பெண்களின் பிரதிநிதித்துவம்:
(Female Representation at Every Seniority Level) :

இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆரம்ப நிலையில் (Entry Level) 28.7% சதவிகிதமாகவும், மூத்த பங்களிப்பாளர் நிலையில் (Senior Contributor Level) 29.5% சதவிகிதமாகவும் உள்ளது. அடுத்ததாக, நிர்வாகப் பதவிகளில் (Managerial Positions) 18.5% சதவிகிதம் மட்டுமே பெண்களால் நிரப்பப்பட்டுள்ளன. இதற்கடுத்த, இயக்குநர் பதவிகளில் (Director Positions) 20.1% சதவிகிதமாக சிறிது உயரும் பெண்களின் பிரதிநிதித்துவம், அதற்கடுத்த உயர்மட்ட பதவிகளில் கணிசமாக குறைந்தே காணப்படுகின்றது.
தொழில்துறை வாரியாக தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்:

குறைந்த பிரதிநிதித்துவம்: கட்டுமானம், எண்ணெய், எரிவாயு மற்றும் சுரங்கம் போன்ற தொழில்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் 11% சதவிகித பிரதிநிதித்துவத்தை மட்டுமே கொண்டுள்ளனர். மொத்த விற்பனை மற்றும் உற்பத்தித் துறைகளில் இது 12% சதவிகிதமாகவும், போக்குவரத்து, தளவாடங்கள், சேமிப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் உபகரணங்கள் வாடகை சேவை ஆகிய துறைகளில் இது 14% சதவிகிதமாக மட்டுமே உள்ளது.
மிதமான பிரதிநிதித்துவம்: தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் தொடர்பான தொழில்களின் தலைமைப் பொறுப்பில் 15% சதவிகிதமாகவும், நிதி சேவைகள், சில்லறை விற்பனை, தொழில்நுட்பம், தகவல், மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளின் தலைமைப் பொறுப்பில் 19% சதவிகிதமாகவும் உள்ளது பெண்களின் பிரதிநிதித்துவம்.
அதிக பிரதிநிதித்துவம்: பெண்களின் பிரதிநிதித்துவம், 'சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு வழங்கும்' (Entertainment Providers) துறைகளில் 22% சதவிகிதமாக உள்ளது. நிர்வாகம் மற்றும் அதற்கு துணைபுரியும் இணை சேவைகள் (Administration and Support Services), மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகிய துறைகளில் 23% சதவிகிதமாகவும் உள்ளது. நுகர்வோர் சேவைகள் , அரசு நிர்வாகம் , கல்வி தொடர்பான துறைகளில் அதிகபட்சமாக முறையே 25%, 29%, 30% சதவிகிதங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர்.
உலகளவில் பெண்களின் தலைமைத்துவம்:
உலக வங்கி 2022 அறிக்கையின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், தோராயமாக 12.5% சதவிகித நிறுவனங்கள் பெண் மேலாளர்களை கொண்டுள்ளனர். நடுத்தர வருமானத்திற்கு சற்று கீழுள்ள நாடுகளில், இந்த எண்ணிக்கை 19.2% சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதேபோல், நடுத்தர வருமானத்தைவிட சற்று அதிகமாக உள்ள நாடுகளில் இந்த எண்ணிக்கை 20.1% சதவிகிதமாக உள்ளது. ஆனால் அதிக வருவாய் உள்ள நாடுகளில் 17.3% சதவிகித நிறுவனங்கள் மட்டுமே பெண் மேலாளர்களை கொண்டுள்ளன.
"உலகில் முன்னேற்றம் மற்றும் தடைகள்" என்ற தலைப்பில் LinkedIn வெளியிட்டுள்ள கட்டுரையின்படி, தலைமைப்பண்புகளில் பாலின சமத்துவத்தை அடைவதில் உலகளவில் தடைகள் நிலவுவதாகவே கூறப்பட்டுள்ளது. உலகளவில் மூத்த தலைமைப் பதவிகளில் 32.1% சதவிகிதம் மட்டுமே பெண்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, மெக்சிகோ, ஐக்கியப் பேரரசு (UK), மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தக் குறியீட்டில் மிதமான முன்னேற்றத்தை மட்டுமே அடைந்திருந்தாலும், 2016ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்சொன்ன நாடுகளில் இக்குறியீடு பின்னோக்கி செல்லவில்லை என்பதையும் இந்த ஆய்வு கூறுகிறது.
பெருநிறுவனங்களில் (Corporate) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வழிகள்:
ஆதாரங்கள்:
https://thequantumhub.com/wp-content/uploads/2024/05/Women-in-Leadership_Linkedin_Final_p1-32_31May.pdf

- Flexible or Hybrid Work Policies: குறிப்பாக கீழ் மற்றும் நடுத்தர நிர்வாக மட்டங்களில் பெண்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வேலைகளில் நெகிழ்வுத்தன்மையை (Flexibility) புகுத்தவேண்டியது அவசியம். இதன்மூலம் பாலின சமத்துவம் பெருக வாய்ப்புகள் அதிகமுள்ளன.
- இந்தியாவில் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பான சட்டம், தொழிலாளர்களுக்கு சம ஊதியம் தரவேண்டும் என சொன்னாலும், இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் சரியாக அமலாக்கம் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதை செய்வதன்மூலம்தான் பெண்கள், தலைமைப் பதவிகளில் தொடர்வதை ஊக்கப்படுத்தமுடியும்.
- குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற குடும்ப மற்றும் சமூக பொறுப்புகள் காரணமாக பெண்கள் பணிகளில் இருந்து இடைவெளி எடுக்கும்போது, நிறுவனங்கள் பெண்கள் பணிக்கு திரும்புவதை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமானது.
- முந்தைய பதவிகளோடு ஒப்பிடாமல், 'Skills-First Approach' மூலம் பெண்களை பணிகளில் அமர்த்தி ஊக்கப்படுத்த வேண்டும்.
- ஆண்கள் மற்றும் பெண்களை அனைத்து குடும்ப பராமரிப்புப் பொறுப்புகளிலும் குழந்தைப் பருவத்திலிருந்தே சமமாக ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுப்பை அரசாங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் வழங்கும் அதேவேளையில், பெரும்பாலான தனியார்த் துறைகளில் இதுபோன்ற விடுப்புகள் இல்லை.