YouTurn

மொத்தமுள்ள 143 நாடுகளில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா! 'உலக மகிழ்ச்சி அறிக்கை 2025' ஓர் பார்வை!

4.389 மதிப்பெண்களுடன் உலக நாடுகளின் தரவரிசையில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா. சமத்துவமின்மையில் கடந்த ஆண்டு 108 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 118வது இடத்திற்கு பின்தங்கி சென்றுள்ளது.

மொத்தமுள்ள 143 நாடுகளில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா! 'உலக மகிழ்ச்சி அறிக்கை 2025' ஓர் பார்வை!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ஐ.நா. நிலையான மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பான (UNSDSN) கேலப் (Gallup), WHR இன் ஆசிரியர் குழு ஆகியவை இணைந்து, உலக மகிழ்ச்சி அறிக்கையை (WHR) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். 


சர்வதேச மகிழ்ச்சி தினம்: 


2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐ.நா.பொது சபையில் பூடான் நாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் படி, மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதலாவது சர்வதேச மகிழ்ச்சி தினமானது 2013 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று அனுசரிக்கப்பட்டது. நிலையான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அனைத்து மக்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு சமமான அணுகுமுறையின் அவசியம் ஆகியவற்றை இந்த நாள் ஊக்குவிக்கிறது.


இந்த சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “உலக மகிழ்ச்சி அறிக்கை” ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள உலக மகிழ்ச்சி அறிக்கை 2025-ன் படி, இந்தியா மொத்தமுள்ள 143 நாடுகளில் 118 வது இடத்தில் உள்ளது. பின்லாந்து எட்டாவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



மொத்தமுள்ள 143 நாடுகளில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா!


உலக மகிழ்ச்சி அறிக்கையின் தரவுகள், சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய ஆறு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இந்த அறிக்கையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. இதில் 0 என்பது மோசமான நிலையையும், 10 என்பது சிறந்த நிலையையும் குறிக்கும் வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 

அதன்படி கடந்த ஆண்டில் 126வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4.389 மதிப்பெண்களுடன் உலக நாடுகளின் தரவரிசையில் 118 வது இடத்தில் உள்ளது. தனிநபர் சதந்திரம் (23 வது இடம்) மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (93 வது இடம்) ஆகியவற்றில் இந்தியா இந்த ஆண்டு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நேபாளம், பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்னோக்கியே உள்ளது என்பதை அறிக்கை காட்டுகிறது. 



மேலும் சமத்துவமின்மையில் கடந்த ஆண்டு 108 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 118வது இடத்திற்கு பின்தங்கி சென்றுள்ளது.


8வது முறையாக முதலிடத்தில் உள்ள பின்லாந்து!


இந்த அறிக்கை, தொடர்ந்து 8வது ஆண்டாக பின்லாந்தை மகிழ்ச்சியான நாடாகக் குறிப்பிட்டுள்ளது, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக கடைசி இடத்தில் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன் இரண்டாவது மகிழ்ச்சியற்ற நாடாகவும், அதைத் தொடர்ந்து லெபனான் கீழிருந்து 3 வது இடத்திலும் உள்ளன.



இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 68வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், பாகிஸ்தான், மியான்மர், இலங்கை மற்றும் வங்கதேசம் முறையே 109, 126, 133 மற்றும் 134வது இடங்களிலும் உள்ளன. ஹமாஸுடனான போர் இருந்தபோதிலும், இஸ்ரேல் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் 111வது இடத்தில் உள்ளது. கோஸ்டாரிகா மற்றும் மெக்சிகோ ஆகியவை 6 வது மற்றும் 10 வது இடம் முறையே முதல் முறையாக, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளன. 

மகிழ்ச்சி தரவரிசையில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. கடந்த 2012 இல் 11 வது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 24வது இடத்தில் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் தனிமையில் உணவு அருந்துபவர்களின் எண்ணிக்கை 53% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. 


ஆதாரம்: 


World Happiness Report - 2025

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை