YouTurn

இந்திய தேர்தலில் அந்நிய நாட்டு தலையீடு - ட்ரம்ப் சொன்ன கருத்து! உண்மை என்ன?

இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் தலையீடு செய்து தாக்கம் செலுத்தும் நோக்கத்திற்காக அமெரிக்கா நிதியுதவி செய்ததாக ட்ரம்ப் கூறினார்

இந்திய தேர்தலில் அந்நிய நாட்டு தலையீடு - ட்ரம்ப் சொன்ன கருத்து! உண்மை என்ன?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்கவின் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க்-ஐ  புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத் திறன் துறையின் (DOGE) தலைவாராக நியமித்தார். இந்தத் துறை அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், தேவையற்ற  வீண் செலவினங்களைக் குறைத்தல் ஆகிய பணிகளில் கவனம் செலுத்தும் என்று சொல்லப்பட்டது. 


இந்நிலையில், கடந்த 2025 பிப்ரவரி 15 அன்று இந்த அரசாங்கத் திறன் துறை (DOGE) ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சர்வதேச அளவில் தேர்தல் ஜனநாயகத்தை பலப்படுத்துவது போன்ற திட்டங்களுக்கு 'USAID' என்ற முகமையின் கீழ் ஒதுக்கப்பட்டு வந்த நிதி, நிறுத்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘இந்தியாவில் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்’ திட்டத்திற்கான வழங்கப்படும் $21 மில்லியன்  நிதியும் நிறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மியாமி நகரில் சொற்பொழிவு ஆற்றிய போது, ‘இந்தியாவில் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் எதற்காக $21 மில்லியன் பணத்தைச் செலவழிக்கவேண்டும்? ஒருவேளை அவர்கள் (ஜோ பைடன் அரசு) வேறு யாரையாவது வெற்றிபெற வைக்க முயன்றிருக்கலாம். இது ஒரு முழுமையான திருப்புமுனையாகும் என்று இந்திய அரசாங்கத்திடம் நாம் சொல்ல வேண்டும்” என்று பேசினார். 


அதாவது இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் தலையீடு செய்து தாக்கம் செலுத்தும் நோக்கத்திற்காக அமெரிக்கா நிதியுதவி செய்ததாக ட்ரம்ப் கூறினார். இக்கூற்று இந்தியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.


ட்ரம்ப்-ன் இந்த கூற்றை ஆதாரமாக கொண்டு காங்கிரசஸ் கட்சியின் மீதும் ராகும் காந்தி மீதும் பாஜக கட்சியினர் குற்றச்சாட்டுகளை தொடுக்க தொடங்கிவிட்டனர். பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா, ‘ராகுல் காந்தி தன்னை சர்வதேச வலைப்பின்னலோடு இணைத்துக்கொண்டு, அந்நிய சக்தியின் கருவியாக மாறி இந்தியாவின் நலன்களை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்’ என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

இதே குற்றச்சாட்டைச் பாஜக MLA வானதி சீனிவாசனும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். ’ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்’ என்பதை காரணமாக கூறி காங்கிரஸும் ராகுல் காந்தியும் வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து மோடியை ஆட்சியை விட்டு அகற்ற சதி செய்வதாக வானதி சீனிவாசன் கூறுகிறார்.


ஆனால் இந்த  $21 மில்லியன் நிதியுதவி வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டது என்றும் இதுவரையில் $13.4 மில்லியன் விடுவிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த விவாகாரம் சம்பந்தமான ஆவணங்களை ஆராய்ந்து  ‘The Indian EXPRESS’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்தியின்படி, கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து  ’தேர்தல்கள் மற்றும் அரசியல் நிகழ்முறைகளை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பு’ என்று சொல்லப்படும் ’CEPPS’ திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு எந்த நிதியுதவியும் செய்யப்படவில்லை. 

”இந்த விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிகிறார். மேலும் இது இந்தியாவின் உள்விவகாரத்தில் அந்நிய நாட்டின் தலையீடு இருந்திருப்பது பற்றிய கவனத்தை கோருகிறது. சம்பந்தப்பட்ட துறைகள் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்துகொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். 


உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ள சில பெயர் குறிப்பிட விரும்பாத (anonymous) நபர்கள் கூறுகையில், ’உள்துறை, வெளி விவகாரத்துறை, நிதித்துறை, சுகாதாரத் துறை போன்ற அமைச்சகங்கள் கடந்த காலத்தில் ’USAID’ உடன் இணைந்து பணிபுரிந்துள்ளது’ என்கிறார்கள். இவர்கள் மேலும் கூறுகையில், செய்தி ஊடகங்கள் சொல்வது போல் இந்த நிதியுதவி இந்தியாவிற்கு வரவில்லை. வங்கதேசத்திற்கு தான் கொடுக்கப்பட்டது என்று இப்போதே முடிவு செய்துவிட முடியாது. இது சம்பந்தமாக ’USAID’ இன்னும் அதிகமான தகவல்களை வெளியிடவேண்டும்’ என்கிறார்கள்.


’The Washington Post’ செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கையின் படி, டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் மட்டுமே 30,000-க்கும் மேற்பட்ட தவறான அல்லது திரிக்கப்பட்ட தகவல்களை கூறியுள்ளார் என்பது தெரிய வருகிறது. அதனால் ட்ரம்ப் பேசும் அரசியல் கருத்துகளை கவனமாக ஆராய்ந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.


ஆனால், இந்தியா என்ற நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைமுறையில் அந்நிய நாட்டின் தலையீடு, தாக்கம் இருப்பதாக ட்ரம்ப் கூறிய கருத்து இந்திய முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.  

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை