YouTurn

12 லட்சம் வருமானம்: வரி தள்ளுபடி! யாருக்கு என்ன பயன்?

புதிய வருமான வரி முறையில் வரி செலுத்துவோருக்கு மட்டும் தான் இந்த 12 லட்ச ஆண்டு வருமானத்திற்கு வரித் தள்ளுபடி (Tax Rebate) கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பழைய முறையில் வரி செலுத்துவோருக்கு பொருந்தாது.

12 லட்சம் வருமானம்: வரி தள்ளுபடி! யாருக்கு என்ன பயன்?

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் 2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், புதிய வருமான வரி முறையில் (New Tax Regime) ரூபாய்.12 லட்சம் வரை வருமானமுடையவர்களுக்கு வரித் தள்ளுபடி (Tax Rebate) கொடுக்கப்படுவதால், அவர்கள் 12 லட்சம் வரை வரி கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.  இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் பலன்களை அளிக்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டது.



உண்மையில் இந்த அறிவிப்பால் யார்க்கு எந்த மாதிரியான பலன்கள் உண்டாகும் என்ற கேள்வி நம்முன் எழுகிறது.


பழைய Vs புதிய வருமான வரி முறை:


புதிய வருமான வரி முறை 2020ஆம் ஆண்டு பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது. அதுவரை நிலவி வந்த பழைய  வருமான வரி முறைக்கு பதிலாக இது கொண்டுவரப்படவில்லை. பழைய முறையும் புதிய முறையும் அக்கம் பக்கமாக நிலவும் வகையில் கொண்டுவரப்பட்டது. வருமான வரி செலுத்தும் நபர்கள் தங்களது வருமானம் மற்றும் சேமிப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறையை தேர்வு செய்து வரி செலுத்தலாம். 


இதில் பழைய  வருமான வரி முறையில் வரி செலுத்துவோர்,  வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance), பயணக் கொடுப்பனவு (Travel Allowance) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட அளவு வருமான வரியில் விலக்கு பெறமுடியும். காப்பீடு, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கு செலவு செய்யும் தொகையிலும் விலக்குகள் பெற முடியும். அதேவேளையில் புதிய வருமான வரி முறையில் வரி செலுத்துவோர் இதுபோன்ற விலக்குகள் பெற முடியாது. ஆனால், புதிய முறையில் வருமான வரியின் அளவு மிகக் குறைவாக இருக்கும்.

இப்படி புதிய வருமான வரி முறையில் வரி செலுத்துவோருக்கு மட்டும் தான் இந்த 12 லட்ச ஆண்டு வருமானத்திற்கு வரித் தள்ளுபடி (Tax Rebate) கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பழைய முறையில்  வரி செலுத்துவோருக்கு பொருந்தாது. 


சென்ற ஆண்டு (2024) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது பழைய வருமான வரி முறையில் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட நபர்களுக்கு வரி தள்ளுபடி கொடுக்கப்பட்டது. அதேவேளையில் புதிய வருமான வரி முறையில் 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி கொடுக்கப்பட்டது. 


ஆனால், இந்தாண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் 12 லட்சம் ஆண்டு வருமானம் வரை வரி தள்ளுபடி கொடுக்கப்பட்டது. ஆனால், பழைய முறையில் அதே 5 லட்சம் வரம்பு நீடிப்பட்டிருக்கிறது. இது புதிய வருமான வரி முறைக்கு அதிக மக்களைக் கொண்டு வரும் யுத்தியாக பார்க்கப்படுகிறது. 


12 லட்சம் ஆண்டு வருமானத்திற்கு அளிக்கப்பட்டது: வரி விலக்கா? வரி தள்ளுபடியா?


இந்த அறிவிப்பு வெளியானதும் இது பற்றிய விவாதம் பொது வெளியிலும், ஊடகங்களிலும் தொடங்கிவிட்டது. ஆனால், பெரும்பாலான நபர்கள் ஆண்டிற்கு 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு (Income) வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது (Exemption) என்றும், வரியே கிடையாது (Nil Tax) என்றும் பரப்பிவருகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல.


புதிய வருமான வரி முறையில் வரி செலுத்துவதற்கு பல்வேறு அடுக்குகள் (Slabs) உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி ஆண்டு வருமானம் 4 லட்சம் வரை இருந்தால் வரியே கிடையாது  (Nil Tax). 4 முதல் 8 லட்சம் வரை இருந்தால் 5% வரி அதாவது குறைந்தபட்சம் 20,000 ரூபாய் வரி இருக்கும். 8 முதல் 12 லட்சம் வரையிருந்தால் 10% வரி அதாவது குறைந்தபட்சம்  40,000 ரூபாய் வரி இருக்கும்.  இவ்வாறு வெவ்வேறு அடுக்குகளுக்கு அதற்கேற்ற  வரி விதிப்புகளும் (Tax Liability) உண்டு. 



இதன்படி 12 லட்சம் வருமானத்திற்கு 60 ஆயிரம் (20,000+40,000) வரை வரி செலுத்தவேண்டும். ஆனால், வருமான வரி சட்டத்தின் பிரிவு  87A படி 60 ஆயிரம் வரை தள்ளுபடி (Rebate) செய்யப்படுவதால்தான் 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று நிதியமைச்சர் சொல்கிறார். 


இதிலிருந்து புதிய வருமான வரி முறையில் 4 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு உண்டு என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.


ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கான வருமான வரியை நீக்குவது அவர்கள் கையில் அதிகமாக பணம் இருக்கும்படி செய்யும். இது நுகர்வை அதிகப்படுத்தும், இவ்வாறு தனியார் நுகர்வு அதிகமாகும் போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இது நாட்டின் பொருளாதார சுமையை ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் (Poor and Lower Middle Class) மீது ஏற்றிவைக்கும் என்று பிரபல பொருளாதார நிபுணர் அஜித் ரானடே கருத்து தெரிவிக்கிறார். 


image.png


ஆண்டு வருமானம் 12 லட்சம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் தள்ளுபடிகள் அளிப்பது பெரும்பாலான வருமான வரி செலுத்துவோரை வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கும். இதனால், அதிக வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். இதனால் இழக்கப்படும் வரி வருவாய்க்கு நிகராக அதிக GST வசூலிக்கப்படுவதை ரானடே சுட்டிக்காட்டுகிறார். GST போன்ற சுமையுள்ள வரிகளை ஏழைகள்தான் அதிகம் செலுத்துக்கிறார்கள். இதனால் செல்வந்தர்கள் வரியிலிருந்து விலக்கு பெருவதோடு, ஏழை கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு GST போன்ற மறைமுக வரிகள் அதிகமாவதும் நேரடி வரியான வருமான வரி குறைந்து வருவதும் கவலையளிப்பதாக கூறுகிறார் ரானடே.


வருமான வரி செலுத்துவோரை புதிய வருமான வரி முறைக்குள் ஈர்க்கவும், இதன் மூலமாக அவர்களது கைகளில் பணப் புழக்கத்தை அதிகப்படுத்தி நுகர்வை அதிகப்படுத்துவம்தான் இந்த வரிவிலக்கின் நோக்கமாக இருக்கமுடியும். ஏனெனில், பழைய வருமான வரி முறையில் வரி செலுத்துபவர்கள் வீட்டு வாடகை, காப்பீடு போன்ற திட்டமிட்ட செலுவுகளை கணக்கில் காட்டி வரி தள்ளுபடி பெறுவார்கள். இதனால் இந்த முறையில் வரி செலுத்துபவர்கள் அதிகம் சேமிக்கவும் திட்டமிட்ட செலவையும் விரும்புவார்கள். இவர்களை புதிய வருமான வரி முறைக்குள் ஈர்ப்பதன் மூலமாக நுகர்வுக்காக அதிகம் செலவு செய்யவைக்க முடியும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை