YouTurn

எண்ணறிவு எழுத்தறிவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

எழுத்தறிவை பொறுத்தவரையில் இந்திய மாநிலங்களுக்கு இடையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்நிலையிலும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பின்தங்கியும் இருக்கின்றன.

எண்ணறிவு எழுத்தறிவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

அடைப்படை எழுத்தறிவு (Functional  Literacy) என்பது ஒரு மனிதன் நவீன சமூகத்தில் நிலவும் சமூக அரசியல் பொருளாதார கட்டமைப்புகளுடன் இணைந்து ஊடாட மிக முக்கியமானதாகும். எழுத்தறிவு தனிமனித முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான சாதனம் என்பதுடன், சமூக அளவிலும் எழுத்தறிவு என்பது ஒரு சமூகம் அல்லது நாட்டின் வளர்ச்சியை நேரடியாக பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படுகிறது. 


ஒருகாலத்தில் தனது பெயரை எழுதவும், படிக்கவும், கையெழுத்து போடவும் தெரிந்தாலே எழுத்தறிவு என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது, எழுத்தறிவு என்பது பெயரை மட்டுமல்ல ஒரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கும் அதே சமயத்தில் அடைப்படையான கணித முறைகளையும் தெரிந்திருக்கவேண்டும் என்பதைத் தான் குறிக்கிறது. 


image.png


ஒன்றிய அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் இந்தியாவில் மொத்தமாக 18.12 கோடி மக்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக (non-literate) இருக்கிறார்கள் என்று அரசின் அதிகாரப்பூர்வ தகவலே குறிப்பிடுகிறது. எழுத்தறிவு உள்ளவர்களுக்கும் எழுத்தறிவு பெறாதவர்களுக்கும் இடையிலான பிளவை நிரப்பும் வகையில் ஒன்றிய அரசு ‘ULLAS’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் ஒன்றிய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்திசைவாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக பல்வேறு சமூக பின்புலத்தில் இருக்கக்கூடிய முறையான கல்வி (Formal Education) வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பயிற்றுவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது. இது முழுக்க முழுக்க தன்னார்வலர்களை கொண்டு நடத்தப்படும் திட்டமாகும். பள்ளிகள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தும் தளமாக இருக்குமென்று இத்திட்டத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட மக்களின் எழுத்தறிவை சோதிக்கும் வகையில் Functional Literacy Numeracy Assessment Test (FLNAT) என்ற தேர்வு நடத்தப்படும். 


இதில் வாசிப்பு (Reading), எழுத்து (Writing), எண்ணறிவு (Numeracy) ஆகிய மூன்று திறன்களும் சோதிக்கப்படும். இது ஒவ்வொன்றுக்கும் 50 மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 150 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும். 


கடந்த 2024 ஜூலை முதல் 2025 மார்ச் வரையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 1.77 கோடி நபர்கள் பங்கேற்றார்கள். இந்த தேர்வு முடிவுகள் குறித்து ‘தேசிய திறந்தவெளி பள்ளி படிப்பிற்கான நிறுவனம் (NIOS)’ வெளியிட்ட தகவல்கள், எழுத்தறிவில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை பாடம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. 



தமிழ்நாட்டில் தேர்வெழுதிய 5,09,694 நபர்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதமாக உள்ளது. திரிபுரா மாநிலத்தில் தேர்வெழுதிய 14,179 நபர்களில் 13,909 நபர்கள் தேர்ச்சிபெற்று தேர்ச்சி விகிதம் 98.1 சதவீதமாக உள்ளது. அதேபோல் டெல்லி யூனியன் பிரதேசத்தில் தேர்வெழுதிய 7,959 நபர்களில் 7,901 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் தேர்ச்சி விகிதம் 99.3 சதவீதமாக உள்ளது. 


ஆனால் இதற்கு மாறாக, உத்தரகாண்ட், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது. உத்தரகாண்ட்-ன் தேர்ச்சி விகிதம் 85.7 சதவீதமாகவும் குஜராத்தில் 87.1 சதவீதமாகவும் ஹிமாச்சல பிரதேசத்தில் 88.3 சதவீதமாகவும் உள்ளது. 

image.png


‘Elsevier’ ஆய்வுத்தளத்தில் ஆய்வுக் கட்டுரை ஒன்றின் படி இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்தறிவு இல்லாதவர்கள் என்று சொல்வதைவிட எழுத்தறிவு பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவதை சரியாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதியின் குறை வளர்ச்சி அல்லது வளர்ச்சியின்மை காரணமாகவே மக்கள் முறையான கல்வி பெறும் வாய்ப்புகளை இழந்துள்ளனர். 


அதேவேளையில், இந்த எழுத்தறிவின்மை என்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. மாநிலங்களுக்கு இடையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக கூறப்படுகிறது. 


மேற்கண்ட FLNAT தேர்வு முடிவுகளும் இதையே மெய்ப்பிப்பதாக இருக்கிறது. மேலும் எழுத்தறிவு விஷயத்தில் மாநிலங்களுக்கு இடையில் இருக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகள் காலப்போக்கில் குறைந்து வரும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் எந்த மாநிலமும் எழுத்தறிவை பொறுத்தவரை 100 சதவீதத்திற்கு மேல் செல்ல முடியாது. பீகார், ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் எழுத்தறிவு கடந்த சில பத்தாண்டுகளாக உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை