YouTurn

சவுக்கு சங்கருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கில் யாருக்கு ஆதரவாக ஆஜரானார் தெரியுமா?

சவுக்கு சங்கருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கில் யாருக்கு ஆதரவாக ஆஜரானார் தெரியுமா?
யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில், பெண் காவலர்கள் பதவி உயர்விற்காக மூத்த அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4ம் தேதி சவுக்கு சங்கரை தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து கைது செய்தனர். 

[video width="1280" height="720" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/05/jZgbBt50dE_OXfsZ.mp4"][/video]

மேலும் தேனியில் இவரை கைது செய்யும் போது கஞ்சா வைத்து இருந்ததாக  தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையும் ஒரு வழக்குப் பதிந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் என்பவர் ஆஜராகி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் அதிமுக-வை சேர்ந்த வழக்கறிஞர். 

கோபால கிருஷ்ணன் இதற்கு முன்னர் பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுகைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானவர் என திமுக ஆதரவாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



Archive link 

இது குறித்து தேடியதில் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவே கோபால கிருஷ்ணன் ஆஜராகியுள்ளார் என்பதை அறிய முடிந்தது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக அளிக்கப்பட்ட புகார், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ 2019, மார்ச் 12ம் தேதி ’தந்தி டிவி’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 



மேலும் பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக பிபிசி தமிழ் கோபால கிருஷ்ணனை  தொடர்பு கொண்டு பேசியது கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக ஆஜராகி இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 



ஆனால், தற்போது சவுக்கு சங்கருக்கு ஆதரவாக இவர் ஆஜரானதும் தவறான தகவலுடன் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை