YouTurn

RO தண்ணீர் ஆரோக்கியமற்றதா?

தண்ணீர் RO முறையில் சுத்திகரிக்கப்படும் போது அதிலுள்ள தாது சத்துகள் நீக்கப்படுகிறது. அதனை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது என்ற செய்திகள் பரப்பப்டுகிறது

RO தண்ணீர் ஆரோக்கியமற்றதா?

கடந்த ஆகஸ்ட் மாதம் பசுமை விடகனில், ’பதவியில் இருக்கும்போது சொன்னதையெல்லாம் செய்து காட்டிய Santha Sheela Nair” என்னும் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிட்ட இடத்தில், ”RO தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO)  சொல்லியுள்ளது.  அது உடல் நலத்திற்கு நல்லதல்ல.  RO மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்படுவதால், நீரில் உள்ள தாது சத்துக்கள் நீக்கப்படுகிறது, பின்னர் மீண்டும் தாது சத்துகள் சேர்க்கப்படுகிறது” என்று பேசியிருந்தார்.

 பொதுவாகவே, RO முறையில் நீர் சுத்திகரிக்கப்படும் போது, அதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற முக்கியமான தாது சத்துகள் நீக்கப்படுவதால், உடலில் தாது சத்துகள் குறைபாடு ஏற்படுகிறது,  இதனால் சோர்வு, தசை பிடிப்பு, எழும்பு தேய்மானம்,  உடல் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த வாதத்திற்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுகள் காட்டப்படுகிறது.

ஆனால் RO தண்ணீர் சோர்வு, எழும்பு தேய்மானம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் எங்கும் சொல்லவில்லை.

தண்ணீரில் தாது சத்துகள் எந்த அளவு உள்ளது என்பதை குறிக்கும் Total Dissolved Solids (TDS)ன் அளவிற்கும் உடல்நல குறைபாட்டிற்கும் சம்பந்தம் இருப்பதாக கூறும்படி எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை என்று  உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் எழுதியுள்ளது.

RO முறையின் முக்கிய நோக்கம், உடலுக்கு பெருகேடு விளைவிக்கும் Heavy Metals என்று சொல்லக்கூடிய ஈயம், ஆர்சனிக், புளூரைட் போன்றவற்றை நீக்குவதோடு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நச்சுக்கிருமிகளையும் நீக்கி குடிப்பதற்கு உகந்த தண்ணீராக மாற்றித் தருவதுதான். இதனை செய்யும் பொழுது உபவிளைவாக தாது சத்துக்கள் நீக்கப்படுக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால், மீண்டும் தாது சத்துக்கள் Remineralisation என்னும் முறையில் சேர்க்கப்படுகிறது. இதனால் தாது சத்துகள் இழப்பு என்பது தவிர்க்கூடியதுதான். எல்லா சுத்திகரிப்பு நிலையக்களிலும் இவை செய்யப்படுகிறதா? என்பதை அரசு தான் கண்காணிக்க வேண்டும்.

இதனால் பலரும் சொல்வது போல் RO குடிநீர் அத்தனை மோசமானதல்ல.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படி, உலகின் வெவ்வேறு நிலப்பரப்புகளில் உள்ள தண்ணீருக்கு Total Dissolved Solids (TDS)ன் அளவு மாறுபடும். TDSன் அளவு 1000 மி.கி/லிட்டருக்கு குறைவாக இருகும் நீர் பொதுவாக  குடிப்பதற்கு உகந்தகாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

TDSன் அளவு 500 மி.கி/லிட்டருக்கும் குறைவாக உள்ள தண்ணீரை கொடுக்கும் சுத்திகரிப்பான்களை தடை செய்யச் சொல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய வழிகாட்டுதல் ஆணையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததாக  'Business Standard’ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதே செய்தியில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி, தண்ணீர் TDSன் அளவு 300மி.கி/லிட்டருக்கு குறைவாக இருந்தால் நல்ல குடிநீர் என்றும், 900மி.கி/லிட்டர் இருந்தால் மோசமான குடிநீர் என்றும், 1200மி.கி/லிட்டருக்கு அதிகமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நீர் என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது. இந்திய சூழலை பொறுத்தவரை  TDSன் அளவு 500 மி.கி/லிட்டர் இருப்பது நல்ல குடிநீருக்கான தரம் என்பதை தான்.

RO தண்ணீரில் இந்த அளவு தாது சத்துகள் இல்லை என்பதால் சிலர் அதை தவிர்த்துவிட்டு, சாதாரண நிலத்தடி நீரை குடிக்கலாம் என்று அறிவுறுத்துக்கின்றனர். RO பயன்பாட்டை தவிக்கச் சொல்கின்றனர்.

ஆனால்,  இந்தியாவின் மக்கள் தொகை, இயற்கையாக கிடைக்கும் நீரின் தரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் RO நீரின் பயன்பாட்டை உடனடியாக தவிர்ப்பது நடைமுறை சாத்தியமானதல்ல. மேலும், 'National Water Mission’ தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வமான தகவலின் படி, இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, புளூரைட், நைட்ரேட், ஆர்சனிக் போன்ற நச்சுகள் இருப்பது உறுதியாகிறது.

சுத்தமான தண்ணீர் பிரச்சனையை தீர்க்க RO தான் ஒரே தீர்வு என்று நாம் சொல்லவில்லை. அதே நேரத்தில், இந்தியாவின் நிலத்தடி நீரின் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு பார்க்கும் போது சுத்தமான குடிநீர் பிரச்சனைக்கு நாம் நீண்டகால தீர்வை கண்டடையும் வரை RO தொழில்நுட்பம் நல்ல மாற்றாக இருக்கும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை