YouTurn

144 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை முந்திய இந்தியா.. UNFPA வெளியிட்ட தரவுகள் இதோ!

144 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை முந்திய இந்தியா.. UNFPA வெளியிட்ட தரவுகள் இதோ!
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA), உலக மக்கள் தொகை வளர்ச்சி குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை, “உலக மக்கள் தொகை நிலை - 2024” என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு "ஒன்றிணைந்த வாழ்க்கை முறைகள், நம்பிக்கையின் இழைகள்: பாலியல், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் உள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருதல்" (Interwoven Lives, Threads of Hope: Ending Inequalities in Sexual and Reproductive Health and Rights) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

உலகளவில் 1.44 பில்லியன் மக்கள்தொகையுடன் முன்னணியில் உள்ள இந்தியா:

அறிக்கையின் படி 144.17 கோடி மக்கள்தொகையுடன் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 142.5 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தியாவின் மக்கள் தொகை 77 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய மக்கள் தொகையில் 24% பேர் 0-14 வயதுடையவர்கள் என்றும்,  17% பேர் 10-19 வயதுடையவர்கள் என்றும், 26% பேர் 10-24 வயதுடையவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது. இதே போன்று 68% பேர் 15-64 வயதுடையவர்களாகாவும்,  7% பேர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாகாவும் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகாவும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளாகவும் உள்ளது.



மேலும் மக்கள் தொகையில் மற்ற நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தியா சீனாவைத் தொடர்ந்து, அமெரிக்கா 341.8 மில்லியன், இந்தோனேஷியா 279.8 மில்லியன், பாகிஸ்தான் 245.2 மில்லியன், நைஜீரியா 229.2 மில்லியன்,  பிரேசில் 217.6 மில்லியன், பங்களாதேஷ் 174.7 மில்லியன், ரஷ்யா 144 மில்லியன், மெக்சிகோ 129.4 மில்லியன் மக்கள்தொகையுடனும் உள்ளன. இதன்படி, உலக மக்கள் தொகை 8.119 பில்லியனாக உயர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 



இந்தியாவில் மகப்பேறு இறப்புகள்:

2020 தரவுகளின் படி, இந்தியாவில் மகப்பேறு இறப்புகள் விகிதம் 103 ஆகக் (100,000 பிறப்புகளுக்கு இறப்பு) குறைந்துள்ளன, இது உலகளாவிய மகப்பேறு இறப்புகளில் 8% ஆகும். அதிகபட்சமாக  100,000 பிறப்புகளுக்கு 1,671 இறப்புகள் என்ற விகிதத்துடன் அருணாச்சலப் பிரதேசத்தின் திராப் மாவட்டம் முன்னிலையில் உள்ளது. 



உலகளவில் மகப்பேறு இறப்புகள் விகிதம் 223 ஆக உள்ளது. இதேபோன்று இளம்பருவ பிறப்பு விகிதம் (Adolescent birth rate per 1,000 girls aged 15-19) 41 ஆக உள்ளது. மேலும் பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவிக்கும் வாய்ப்பு, சாதாரணப் பெண்களை விட, ஊனமுற்ற பெண்களுக்கு 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.



மேலும் இந்தியாவில் குழந்தை திருமணங்களைப் பொறுத்த வரையில், 2006-2023 காலங்கட்டங்களுக்கு இடையில் குழந்தை திருமணங்களின் சதவீதம் 23% ஆக உள்ளது.  2023 இல் உலகளவில் குழந்தை திருமண சதவீதம் 19 சதவீதமாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.



உலகளவில் நாடு வாரியாக இளம்பருவ பிறப்பு விகிதத்தை (Adolescent birth rate per 1,000 girls aged 15-19) கீழே உள்ள வரைபடத்தில் தெளிவாகக் காணலாம்.



ஆதாரங்கள்:

https://www.unfpa.org/sites/default/files/pub-pdf/swp2024-english-240327-web.pdf
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை