ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் உண்மையாகிவிடாது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே !

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பிரதான நுழைவாயில் பலத்த சேதம் அடைந்திருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதில் எந்த வித சேதமோ, யாருக்கும் காயமோ எதுவும் ஏற்படவில்லை என கூடுதல் காவல் ஆணையர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் (Gate No.1) அருகே, நேற்றைய தினம் (2023, அக்டோபர் 25) கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசினார். இதனையடுத்து அந்த நபர் கைதும் செய்யப்பட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி அறிக்கையில், மர்ம நபர் வீசிய பெட்ரோல் குண்டால் ராஜ்பவன் பிரதான நுழைவாயில் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான சேதம் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி நுழைவாயிலுக்கும் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட இடத்திற்கும் மிகுந்த இடைவெளி உள்ளது.

இந்த சம்பவம் குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பில், “இதில் யாரும் பாதிக்கப்படவோ சேதம் ஏற்படவோ இல்லை. இதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் கருக்கா வினோத் (42), தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே போல் ஒரு அரசியல் கட்சி அலுவலகம் முன்பு பாட்டிலை வீசினார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் இதே போன்ற சம்பவத்தினை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மது அருந்தியுள்ளார். அவர் இயல்பு நிலைக்கு வந்த பிறகு மேற்கொண்டு விசாரணை செய்யப்படும். அவர் வீசிய பாட்டில் அவர் நினைத்தது போல வெடிக்கவில்லை” எனக் கூறுகிறார்.
செய்தியாளர் ஒருவர் ‘கவர்னர் மாளிகை மீது இப்படிச் செய்துள்ளார். இதற்கு என்ன காரணம்’ என்ற கேள்வியை எழுப்புகிறார். அப்போது கூடுதல் காவல் ஆணையர் ‘கவர்னர் மாளிகை மீது அல்ல. இந்த பாட்டில் சர்தார் படேல் சாலையில் விழுந்துள்ளது. தடுப்புகளைக் கூட தாண்டி வரவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
மேலும் ஆளுநர் மாளிகை அளித்த செய்தி அறிக்கையில் ‘2022, ஏப்ரல் 18ம் தேதி ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்கையில் தடி மற்றும் கற்களைக் கொண்டு உடல் ரீதியாகத் தாக்கப்பட்டார். அது குறித்து FIR பதிவு செய்யப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
முதலில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி தவறானது. இதில் உள்ள சம்பவம் 2022, ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, கருப்புக் கொடி காண்பிக்கப்பட்டது தொடர்பாக ராஜ்பவன் டிவிட்டர் பதிவிலும் ஊடக செய்தி வாயிலாகவும் உறுதி செய்ய முடிகிறது.

X link
இந்த சம்பவம் நடைபெற்ற போது அவரது வாகனத்தின் மீது தடி மற்றும் கற்கள் கொண்டு தாக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியது. ஆனால், ஆளுநரது வாகனம் போராட்டக்காரர்களைக் கடந்து சென்ற பிறகே கையிலிருந்த கொடிகள் மற்றும் பதாகைகள் சாலையில் வீசப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஆளுநரின் பாதுகாப்பு அலுவலர் விஷ்வேஸ் சாஸ்திரி அறிக்கையைக் கொண்டு யூடர்ன் கட்டுரை வெளியிட்டிருந்தது.
[video width="848" height="480" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2023/10/WhatsApp-Video-2023-10-26-at-4.24.11-PM.mp4"][/video]
மேலும் படிக்க : தமிழக ஆளுநர் காரின் மீது கற்கள், கறுப்புக் கொடிகள் வீசப்பட்டதா ?
அதேபோல், இச்சம்பவம் நடந்த அதே தேதியில் (2022 ஏப்ரல் 19) காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்ய முடியவில்லை எனப் பொய்யான தகவலை ஆளுநர் இதற்கு முன்னரே ஒரு நேர்காணலில் பேசி இருந்தார். ஒரே பொய்யினை மீண்டும் மீண்டும் வெவ்வேறு பாணியில் ஆளுநர் தரப்பிலிருந்து கூறப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஆளுநர் பேசிய பொய்கள் மற்றும் அவை குறித்த உண்மையை யூடர்ன் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : “ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

Press Release No: 71 pic.twitter.com/FofY87mJZO
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 25, 2023