YouTurn

பட்டினிச் சாவின் பிடியில் காஸாவின் குழந்தைகள்!

நிவராண உதவிகள் கிடைக்கவில்லை என்றால் 2 நாட்களில் காஸாவில் 14,000 குழந்தைகள் இறந்துபோவதற்கான வாய்ப்பிருக்கிறது.

பட்டினிச் சாவின் பிடியில் காஸாவின் குழந்தைகள்!

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்களை உடனே நிறுத்துமாறும், உடனடியாக நிவராண உதவிகளை காஸாவிற்குள் அனுமதிக்குமாறும் ஃப்ரான்ஸ், கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. உடனடியாக காஸாவிற்கு நிவராண உதவிகளை கிடைக்கவில்லை என்றால் இன்னும் 48 மணிநேரத்தில் (அதாவது 2 நாட்களில்)  14,000 குழந்தைகள் இறந்துபோவதற்கான வாய்ப்பிருப்பதாக ஐநாவின் நிவாரண உதவிகளுக்கான அதிகாரி ‘டாம் பிளெட்சர்’ குறிப்பிடுகிறார். 


image.png


காஸாவில் உள்ள குழந்தைகள் பட்டினியால் இறந்து போவது பற்றி இப்போதுதான் மேற்கத்திய நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவிக்க தொடங்கியுள்ளன. ஆனால், தற்போதுதான் காஸாவில் பட்டினி ஏற்பட்டுள்ளதா? சமீபத்திய சில நாட்களாக தான் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான காஸா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டினியால் இறந்து போகிறார்களா?


இல்லை! காஸாவில் பசி பட்டினியால், ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறந்து போதுவது கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜீலை மாதமே, ‘காஸாவில் பல பாலஸ்தீனக் குழந்தைகள் பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளாலும் இறந்து போவது, அங்கே பஞ்சம் (Famine) நிலவுவதற்கான மறுக்க முடியாத சான்றாக இருப்பதாக’ ஐநா மன்றம் தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.


image.png


ஆனால் இவ்வளவு நாட்கள் மௌனமாக இருந்த மேற்கத்திய நாடுகளும், அதன் ஊடகங்களும் இப்போது ஏன் இதனை பற்றி பேசுகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி!


கடந்த இரண்டு மாதங்களாக காஸாவீன் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் காஸா மீது தீவிர இராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மார்ச் மாதம் வரையில் மட்டுமே 48,000 பலாஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென்று ‘Lancet medical journal’ தெரிவித்துள்ளது. 


கடந்த 2025 ஜனவரி மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் (ceasefire) ஏற்பட்டது. ஆனால், அது 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. கடந்த மார்ச் 18ஆம் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ’மீண்டும் படைகளை அதிகரிக்கவும் தாக்குதல்களை நடத்தவும் ஹமாஸ் தயாராகி வருவதாகவும் அதனால் தான் இஸ்ரேல் முன்கூட்டியே தாக்குதல்கள் (pre-emptive strikes) நடத்தியதாகவும்’ இந்த கொடூர தாக்குதலுக்கு இஸ்ரேல் நியாயம் கற்பித்தது. மேலும் ‘உணவு, மருந்து மற்றும் பிற உயிர்காக்கும் உதவிகள்’ அனைத்தையும் காஸாவிற்குள் நுழையவிடாமல் தடுத்தது இஸ்ரேல். 


image.png

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 2023 அக்டோபரில் தொடங்கியதிலிருந்து காஸாவில் மக்கள் தஞ்சமடைந்துள்ள குடியிருப்புகளையும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்கிவருகிறது இஸ்ரேல் இராணுவம். இதனால் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கவேண்டிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் செய்யப்படுகிறது.


காஸாவில் கற்பிணிகளுக்கு முட்டை பால் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவு ஏதும் கிடைப்பதில்லை. இதனால் குழந்தைகள் குறைவான எடையுடன் பிறக்கின்றன. இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பால் புகட்டக் கூட முடியவில்லை. ஏனெனில் அவர்களே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 


இதிலிருந்து பாலஸ்தீன மக்களை குண்டுகள் மூலமாக மட்டுமல்ல, உணவு மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளை தடுத்து பட்டினி போட்டும், மருத்துவ கட்டமைப்பை சிதைத்தும் இஸ்ரேல் கொன்று வருகிறது என்பது தெரிகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் பட்டினியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பாலஸ்தீன மக்களை கொன்று வருவதாக உலகம் முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் கணிப்பின்படி காஸாவில் உள்ள 93% குழந்தைகள் அதாவது 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பஞ்சத்தின் படியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவும் மருத்துவ உதவிகளும் கிடைக்கவில்லை என்றால் பலர் மரணிக்க நேரிடும் என்ற இக்கட்டான நிலையில் தான் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் கண்டிக்க தொடங்கியுள்ளது.


ஆனால், இந்த கண்டிப்பிலும் உண்மைத்தன்மை இல்லை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை இங்கிலாந்து தடை செய்திருந்த நிலையிலும், இஸ்ரேலுக்கு இங்கிலாந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளது தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது. காஸா மீதான தாக்குதலுக்கு உதவும் வகையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துகொண்டே இஸ்ரேலின் தாக்குதலை கண்டிப்பதாக இங்கிலாந்து பாசாங்கு செய்கிறது. 

image.png


ஐநா மன்றம், மேற்கத்திய நாடுகள் இவ்வளவு வலியுறுத்திய பின்னரும் இஸ்ரேல் வெகு குறைவான அளவில் மட்டுமே நிவாரணப் பொருட்களை அனுமதித்து வருகிறது. இஸ்ரேல் உள்ளே அனுமதிக்கும் இந்த நிவாரண உதவி என்பது காஸாவுக்கான கடல் அளவு தேவையில் ஒரு துளி மட்டுமே என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் இன்னும் காஸாவில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை