YouTurn

பிரியாணி மேன் என்கிற யூடியூபர் ஏன் கைது செய்யப்பட்டார்?

சில மாதங்களுக்கு முன்பாக செம்மொழி பூங்கா குறித்து அவர் வெளியிட்ட காணொலியில் பெண்களை மிகவும் கொச்சையாக பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரியாணி மேன் என்கிற யூடியூபர் ஏன் கைது செய்யப்பட்டார்?

நகைச்சுவை என்கிற பெயரில் பெண்களுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு காணொலிகளை வெளியிட்டு வரும் ‘பிரியாணி மேன்’ என்கிற அபிஷேக் ரபி சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர். இன்று அவரை அடையார் சைபர் கிரைம் காவல்துறை கைது செய்தது.

என்ன வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்?

சில மாதங்களுக்கு முன்பாக செம்மொழி பூங்கா குறித்து அவர் வெளியிட்ட காணொலியில் பெண்களை மிகவும் கொச்சையாக பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காணொலியில், செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைகளைக் காட்டி, கொச்சை வார்தைகளுடன் ஆபாசமான வகையில் பேசியிருக்கிறார்.

மின்னணு சாதனங்கள் மூலம் பொய் செய்திகள் பரப்பி மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை உண்டாக்கிய காரணத்துக்காகவும் சமூகத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரிடையே பகைமையை தூண்டும்வகையில் செய்தி பரப்பியதற்காகவும், பாரதிய நியாய சந்ஹிதா 353(1)(b), 353 (1)(c), 353(2) ஆகிய சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், Information Technology Act, 1967 சட்டத்தின்படி சட்டப்பிரிவு 67 மற்றும் Indecent Representation of Women Act சட்டத்தின்படி சட்டப்பிரிவு 6 அதனுடன் சேர்ந்து Women Harrasment Act சட்டப்பிரிவு 4ன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கும் பிற யூடியூபர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் நடந்த வாக்குவாத சண்டையில் இவர் யூடியூப் நேரலையின்போது தூக்கிட்டுக்கொள்ள முயற்சி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை