YouTurn

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்(49) புற்றுநோய் காரணமாக காலமானார்.

Facebook link | Archive link

விரிவான விளக்கம்

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் என்பவர் புற்றுநோய் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது உயிரிழந்து விட்டார் எனத் தந்தி டிவி, தினமணி, தினகரன், சூரியன் FM, தினத்தந்தி, ஐ தமிழ் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 



Archive link



Archive link

உண்மை என்ன ?

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயின் காரணமாகக் காலமானார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பற்றி இணையத்தில் தேடியதில் அது தவறான தகவல் என்பதை அறிய முடிந்தது. 



இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலோங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய பரவும் தகவல் வெறும் வதந்தியே. நான் அவரிடம் பேசியதில் இருந்து இதனை உறுதிப்படுத்த முடிகிறது. மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் மக்களே’ எனக் கிண்டலாகப் பதிவு செய்துள்ளார். 

முன்னதாக ஹீத் இறந்ததாக ஹென்றி ஒலோங்காவும் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது தவறான செய்தி எனத் தெரிந்ததும் ஹீத் நலமுடன் உள்ள செய்தியை அவரிடம் பேசிய பிறகு பதிவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஜிம்பாப்வே நாட்டின் ‘SPORTS AND RECREATION COMMISSION’ இன்றைய தினம் (ஆகஸ்ட் 23ம் தேதி) அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதிலும் ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் உள்ளார் என்றும், சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரவுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இது பற்றி ‘Mid day’ தளத்தில் வெளியான செய்தியில் "இது முழுக்க முழுக்க வதந்தி மற்றும் பொய். நான் உயிருடன் இருக்கிறேன். இத்தகைய செய்தியை வெளியிட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த செய்தியால் நான் காயப்பட்டேன்" என்று ஸ்ட்ரீக் ஒரு வாட்ஸ்அப் செய்தியில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : உ.பியில் தக்காளி கடைக்கு பவுன்சர்கள்… உண்மை தெரியாமல் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

இதற்கு முன்னர் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்திகள் பற்றிய உண்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்.. திரித்து வெளியிட்ட தந்தி டிவி.. உண்மையான எண்ணிக்கை இதோ !

முடிவு : 

நம் தேடலில், ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது. அவர் நலமுடன் இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க