YouTurn

மொழி, தமிழக கோயில்கள் குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்ததாக வதந்தி !

மொழி, தமிழக கோயில்கள் குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகக் கோவில்களில் ரயில் நிலையத்தைப் போல அனைவரும் வந்து போவதைக் காண முடிகிறது - யோகி ஆதித்யநாத்



Facebook link | Archive link 

மொழியிலிருந்து பழக்க வழக்கங்கள் வரை மாறுதல் தேவை. தமிழர்களுக்குத் தீவிரமாக ஹிந்து கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்



Twitter link | Archive link

தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் - பிரதமர் மோடி



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பேச்சுகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்து ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பொய் செய்திகளும் அதிக அளவில்  பரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் எதிரான பொய் செய்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் பரப்புரைக்கு தமிழகம் வந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மொழி மற்றும் தமிழக கோயில்கள், கலாச்சாரம் குறித்து பேசியதாக இரு ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகின்றன.



Facebook link | Archive link 



Facebook link | Archive link

இவ்விரு செய்தியை நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனமே போலியான நியூஸ் கார்டுகள் என பதிவிட்டு இருக்கிறது.

அடுத்ததாக, தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்கானது. ஆகவே நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் என பிரதமர் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசியதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : பிரதமர் மோடிக்கே ஃபோட்டோஷாப் செய்திகள்.. அரசியல் பகடி வேலை !

இதற்கு முன்பாக, இதே நியூஸ் கார்டில் பிற போலி கருத்துக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் வைரல் செய்தது தொடர்பாகவும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : அனிதா நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தாரா ?

தமிழக தேர்தல் தருணத்தில் செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளை தங்கள் கட்சி மற்றும் கொள்கைக்கு ஏற்றவாறு எடிட் செய்து போலியான செய்திகளை பரப்புவது மிகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, செய்தி நிறுவனத்தின் லோகோ உடன் தெளிவாக எடிட் செய்கிறார்கள். ஆகையால், செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் செய்திகளை பகிர வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க