யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஹிந்துவிரோதிகள் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலார்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உ.பி யை குப்பை மேடாக்க முடியாது. பட்டாசு தடை குறித்து யோகி ஆதித்யநாத்.

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி, கர்நாடகா, சண்டிகர், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் காற்று மாசு அதிகரித்து வருவதாக காரணங்கள் கூறி பட்டாசு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பட்டாசு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், " ஹிந்துவிரோதிகள் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலார்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உ.பி யை குப்பை மேடாக்க முடியாது " என உத்தரப் பிரதேசத்தில் பட்டாசுக்கு தடை விதித்தது குறித்து யோகி ஆதித்யநாத் பேசியதாக TN NEWS 24 எனும் முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேச அரசு மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கவில்லை. லக்னோ உள்ளிட்ட காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் 13 முக்கிய நகரங்களுக்கு மட்டுமே தடை விதித்து உள்ளனர். மேலும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு குறித்து TN NEWS24 முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டுகளை ஆராய்கையில் அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. மேலும், இது போலிச் செய்தி, இதுபோன்ற எந்தவொரு செய்தியையும் TN NEWS24 வெளியிடவில்லை என வைரலாகும் நியூஸ் கார்டு குறித்து பதிவிட்டு உள்ளனர்.
Facebook link | Archive link
செய்தி ஊடகங்கள் மற்றும் முகநூல் பக்கங்களின் நியூஸ் கார்டுகளில் ஃபோட்டோஷாப் செய்து போலிச் செய்திகளை வெளியிடுவது தமிழகத்தில் அதிகம் நிகழ்கிறது. எதிர் எதிர் அரசியல் கருத்து கொண்டவர்கள் இப்படி மாறி மாறி ஃபோட்டோஷாப் செய்திகளை வெளியிட்டு கிண்டல் செய்யவும், வன்மத்தை விதைக்கவும் முயல்கிறார்கள்.