YouTurn

இமயமலையில் பனிமனிதனின் கால் தடமா ?

இமயமலையில் பனிமனிதனின் கால் தடமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமீபத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இமயமலை பகுதியில் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக பதிவிட்ட ட்விட்டர் பதிவால் புராணக் கதைகள், செவி வழிக் கதைகளில் கேட்டு வந்த பனி மனிதர்கள் பற்றி பேசத் துவங்கினர். 2019 ஏப்ரல் 29-ம் தேதி ADG PI - indian army ட்விட்டர் பக்கத்தில் , " மக்காலு பேஸ் கேம்...

பரவிய செய்தி

இமயமலை பகுதியில் புராண விலங்கான பனி மனிதனின் 32 இன்ச் கால் தடத்தை கண்டுள்ளனர்..

விரிவான விளக்கம்

சமீபத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இமயமலை பகுதியில் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக பதிவிட்ட ட்விட்டர் பதிவால் புராணக் கதைகள், செவி வழிக் கதைகளில் கேட்டு வந்த பனி மனிதர்கள் பற்றி பேசத் துவங்கினர்.



2019 ஏப்ரல் 29-ம் தேதி ADG PI - indian army ட்விட்டர் பக்கத்தில் , " மக்காலு பேஸ் கேம் அருகே ஏப்ரல் 9 ம் தேதி இந்திய ராணவத்தின் மலையேற்ற பயணக் குழு புராண விலங்கான பனிமனிதனின்  32*15 இன்ச் கால் தடத்தை கண்டனர் " எனப் பதிவிட்டு இருந்தனர்.

இதையடுத்து, தமிழ் செய்தி முதல் உலக செய்திகள் வரை இந்த பனி மனிதன் கால் தடத்தை பற்றிய செய்தி அதிகம் பரவியது.

இந்நிலையில்,  இன்று வெளியான செய்தியில் நேபாளம் இராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் கூற்றை மறுத்துள்ளனர்.

நேபாளம் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே ஹிந்துஸ்தான் டைம்ஸ்-யிடம், கால் தடத்தை கண்ட இந்திய ராணுவக் குழு உடன் எங்களின் இணைப்பு குழுவும் இருந்தனர். உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள முயன்ற போது , அப்பகுதியில் அடிக்கடி காணக்கூடிய பனி கரடி உடைய கால் தடம் என உள்ளூர் மக்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் கூறியுள்ளனர்  " எனத் தெரிவித்தார்.

நேபாளத்தின் பரூன் பள்ளத்தாக்கில் 35 வருடங்களாக பணியாற்றி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான டேனியல் டேய்லர் , " அந்த குறிப்பிட்ட கால் தடம் இமயமலை கறுப்பு கரடி மற்றும் அதன் குட்டி உடையது " என்றுள்ளார்.

ஆகையால், இமயமலையில் புராண விலங்கான பனி மனிதன் இருப்பதாக  பரவும் செய்திகளை மக்கள் பகிர வேண்டாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.