YouTurn

புகைப்படத்தில் இருப்பவர் உலகின் உயரமான மனிதரா ?

புகைப்படத்தில் இருப்பவர் உலகின் உயரமான மனிதரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உலகின் உயரமான மனிதர், உயரம் - 10 அடி 09 அங்குலம், எடை - 248 கிலோ, பெயர் - அன்வர் சாதிக், நாடு - ஆப்கானிஸ்தான்



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாறையின் மீது நிற்கும் மனிதரே உலகின் உயரமான மனிதர் என்றும், அவரின் உயரம் மற்றும் எடை முறையே 10.09 அடி மற்றும் 248 கிலோ எனக் கூறி பகிர்ந்து வருகிறார்கள். இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.

இணையத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் நபரை பார்க்கையில் ஃபோட்டோஷாப் செய்ததாக இருக்குமோ எனத் தோன்றியது. ஏனெனில், உயரத்திற்கும், தலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், 10.09 அடி உயரம் மற்றும் 248 கிலோ எடை கொண்ட மனிதர் அவ்வளவு சிறிய பாறையில் நிற்க முடிந்தது எனத் தெரியவில்லை. எனினும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும், அன்வர் சாதிக் தொடர்பான எந்தவொரு செய்திகளும் கிடைக்கவில்லை.



இருப்பினும், உலகின் மிக உயரமான மனிதர் யார் என அறிந்து கொள்ள தேடிய பொழுது, உலக கின்னஸ் சாதனை தளத்தை ஆராய்ந்து பார்த்தோம். 1940ம் ஆண்டில் இறந்த அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் வாட்லோ என்பவரே உலகின் உயர்ந்த மனிதர் எனும் சாதனையை தக்க வைத்து உள்ளார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கடைசியாக அளவிடப்பட்ட போது 8 அடி 11 அங்குல உயரத்தில் இருந்தார். தன்னுடைய 22வது வயதிலேயே ராபர்ட் வாட்லோ உயிரிழந்தார்.



 

மேலும், தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிகவும் உயரமான மனிதர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்தவர் துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசேன். அவரின் உயரம் 8 அடி 2.8 அங்குலம்.



முடிவு  :

நம் தேடலில், உலகின் மிக உயரமான மனிதர் என கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அதிகப்பட்ச உயரமே 8 அடி 11 அங்குலம் மற்றும் 10 அடி 09 அங்குலம் கொண்டவர் என பரப்பப்படும் புகைப்படம் மற்றும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க