யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஈரான் நாட்டின் எஸ்ஃபஹான் பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையான அனஹிதா ஹசீம்சாதேஹ் இணையத்தில் உலக அளவில் பிரபலமான குழந்தை மாடல். நீல நிறக் கண்களைக் கொண்ட இக்குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானவை. அக்குழந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 6.5 லட்சம் பாலோயர்கள் உள்ளார்கள். அனஹிதா...
பரவிய செய்தி
உலகின் அழகான குழந்தைகளுக்குள் ஒருவரான ஈரானைச் சேர்ந்த அனஹிதா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 2-ம் கட்டத்தில் உள்ளார்.

Facebook link | archived link

Facebook link | archived link
விரிவான விளக்கம்
ஈரான் நாட்டின் எஸ்ஃபஹான் பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையான அனஹிதா ஹசீம்சாதேஹ் இணையத்தில் உலக அளவில் பிரபலமான குழந்தை மாடல். நீல நிறக் கண்களைக் கொண்ட இக்குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானவை. அக்குழந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 6.5 லட்சம் பாலோயர்கள் உள்ளார்கள்.
அனஹிதா குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் குழந்தை இருமலுடன் மூச்சு விட சிரமப்படும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய ஆராய்ந்து பார்த்தோம்.

அனஹிதா பெயரில் அவரின் தாய் கையாண்டு வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் அனஹிதா பேசும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். கொரோனா வைரசால் அனஹிதா பாதிக்கப்பட்டு உள்ளார் என பரவிய வதந்தியால் பலரும் அந்த வீடியோவின் கமெண்ட்டில் வதந்தியை கண்டதாக பதிவிட்டு உள்ளார்கள்.

Instagram link | archived link
அனஹிதா குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக வேறொரு குழந்தையின் வீடியோவை தவறாக பரப்பி வருகிறார்கள். அவர் நலமுடன் உள்ளார் என அவர் பேசிய சமீபத்திய வீடியோ மூலம் அறியலாம். வைரலாகும் வீடியோவில் இருக்கும் குழந்தை யார் என அறிய முடியவில்லை.
மேலும் படிக்க : கொரோனா பாதித்த கனடா பிரதமரின் மனைவி பேசும் வீடியோவா ?
இதற்கு முன்பாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூவோ உடைய மனைவி சோபியா பேசும் வீடியோ என மற்றொரு பெண்ணின் வீடியோ வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.