YouTurn

9969777888 எண் பெண்களின் பாதுகாப்பிற்கானதா ?

9969777888 எண் பெண்களின் பாதுகாப்பிற்கானதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை வெளியிட்டது என 9969777888 என்ற எண் ஆனது சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. தகவல் அறிவோம் என இந்த செய்தியை பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அந்த எண் தமிழகத்தில் அல்லது இந்திய அளவில் பயன்பாட்டிற்கானது என்பது தவறான தகவலாகும். இதற்கு முன்பும்...

பரவிய செய்தி

பெண்கள் ஆட்டோ, டாக்ஸியில் ஏறும் முன்பு , அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற எண்ணிற்கு sms மூலம் அனுப்பி வைக்கவும். GPS மூலம் அந்த வாகனம்  ட்ராக் செய்ய காவல்துறைக்கு உதவும். தனியாக பள்ளி செல்லும் மாணவிக்கும் பொருந்தும்.

விரிவான விளக்கம்

தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை வெளியிட்டது என 9969777888 என்ற எண் ஆனது சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. தகவல் அறிவோம் என இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

ஆனால், உண்மையில் அந்த எண் தமிழகத்தில் அல்லது இந்திய அளவில் பயன்பாட்டிற்கானது என்பது தவறான தகவலாகும். இதற்கு முன்பும் நரேந்திரமோடி படத்துடன், பெங்களூர், டெல்லி காவல்துறையினர் பெயரில் பரவி இருந்தது.



2014 மார்ச் மாதம் மும்பை நகரின் கூடுதல் காவல் ஆணையர் ராகேஷ் மரியா , பெண்களின் பாதுகாப்பிற்கு 9969777888 என்ற எண்ணை ' சர்வதேச பெண்கள் தினம்' அன்று அறிமுகம் செய்தார். இந்த எண்ணிற்கு வாகனத்தின் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி ட்ராக் செய்யும் வகையில் ஏற்படுத்தி இருந்தனர் .

ஆனால், சரியான ஆதரவு இல்லாமல், அதிகம் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால் 2017 மார்ச் மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, 9969777888 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி யாரும் ஏமாற்றமடைய வேண்டாம். சரியான தகவல்களை பகிரவும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.