YouTurn

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாதா ?

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மே 1 முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்குகிறது.  பெண்களுக்கு மாதவிடாய் காலங்களை சரிபார்த்து தடுப்பூசி எடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் மாதவிடாய்க்கு 5 நாட்களுக்கு முன்னும், பின்னும் தடுப்பூசி எடுக்க வேண்டாம், ஏனென்றால் மாதவிடாயின் போது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தடுப்பூசியின் அளவு முதலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது, பின்னர் அது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. எனவே மாதவிடாயின் போது தடுப்பூசி செலுத்தும் நபர் பாதிக்கப்பட அதிக ஆபத்து இருக்கிறது.

விரிவான விளக்கம்

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கூறி இப்பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மருத்துவர் பிரவீன் அவர்கள் கூறுகையில், " மாதவிடாய் காலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டுப்பாடுகள் இருப்பதாக எந்த சர்வதேச நிறுவனங்களிடம் இருந்தும் எந்தவொரு வழிகாட்டுதல்களும் இல்லை. மாதவிடாய் காலத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாதவிடாய் காலத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி ஒரே மாதிரியாக இருக்கும், குறையாது.

தடுப்பூசி முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காது. லேசான தொற்று மட்டுமே ஏற்படும். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க காரணமாகிறது.

ஒவ்வாமை மற்றும் கர்ப்பமாக உள்ளவர்கள் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொள்ள காத்திருக்க வேண்டும். மற்றபடி, அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.. அமெரிக்க வழிகாட்டுதல்களில், முன்கள பணியாளர்களில் கர்ப்பமாக இருப்பவர்களும் கூட தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கிறது " எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பூசி செலுத்தும் முன் CRP சோதனை அவசியமா ? 

முடிவு :

நம் தேடலில், பெண்கள் மாதவிடாய் காலத்திற்கு 5 நாட்களுக்கு முன்பும், பின்பும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது என பரவும் தகவல் தவறானது. அவ்வாறு எந்த கட்டுப்பாடும் இல்லை என மருத்துவரின் தகவல் மூலம் அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் : 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க