யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இன்றைய சமூதாயத்தில் வீட்டில், பொது வெளியில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் எதிர்பாரா நேரங்களில் உருவாகக்கூடும். பெண்களின் பாதுகாப்பிற்கென புதிய சேவையை தமிழக அரசு தொடங்கி உள்ளதாக மீம் வடிவிலான பதிவை காண நேரிட்டது. அதைப் பற்றி காண்போம். 2018 டிசம்பர் மாதம்...
பரவிய செய்தி
பெண்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவி செய்யவும், பாதுகாப்பு தரவும் தமிழக அரசு 181 ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ளது.

விரிவான விளக்கம்
இன்றைய சமூதாயத்தில் வீட்டில், பொது வெளியில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் எதிர்பாரா நேரங்களில் உருவாகக்கூடும். பெண்களின் பாதுகாப்பிற்கென புதிய சேவையை தமிழக அரசு தொடங்கி உள்ளதாக மீம் வடிவிலான பதிவை காண நேரிட்டது. அதைப் பற்றி காண்போம்.

2018 டிசம்பர் மாதம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண் 181-ஐ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதற்காக சென்னையில் உள்ள அம்மா கால் செண்டரில் 181 இலவச தொலைபேசிக்கு என ஓர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தினை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மனநல ஆலோசகர்கள், ஓர் தகவல் தொழில்நுட்ப வல்லுனர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
என்ன என்ன உதவிகள் :
பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி எண் மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவி, கவுன்சிலிங் உள்ளிட்ட சேவைகள் இணைக்கப்பட்டு, பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகள் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
பெண்களுக்கான தற்காப்பை கற்க :
பெண்களுக்கான பிரச்சனைகள் :
பாலியல் ரீதியான கொடுமைகள், வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித்தொகை உள்பட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமானவைக்கு 181 எண்ணை அழைக்கலாம்.
181 எண்ணிற்கு வரும் பெண்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு கண்ட உடன் சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதனை சமூக நலத்துறை கண்காணிக்கும்.
பெண்களுக்கான பாதுகாப்பிற்கு இலவச உதவி எண் 181 ஆனது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு 181 எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருந்தது.
அதேபோன்று, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் சேவை நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அந்த சேவையை விரிவுப்படுத்தி அறிமுகம் செய்துள்ளனர்.