YouTurn

திமுக வழக்கறிஞர் வில்சன் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக ஆஜராகினாரா ?

திமுக வழக்கறிஞர் வில்சன் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக ஆஜராகினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் வழக்கறிஞர் பி.வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக ஆஜராகி உள்ளதாக பழுவேட்டரையர் எனும் முகநூல் பக்கத்தில் ஜூன் 2-ம் தேதி பதிவிடப்பட்டது. அந்த முகநூல் பக்கத்தில், " 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து...

பரவிய செய்தி

8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்ட திமுக நிலைய வழக்கறிஞர் வில்சனை திமுக எம்.பியாக தேர்ந்தெடுத்து இருக்கிறது.

விரிவான விளக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் வழக்கறிஞர் பி.வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக ஆஜராகி உள்ளதாக பழுவேட்டரையர் எனும் முகநூல் பக்கத்தில் ஜூன் 2-ம் தேதி பதிவிடப்பட்டது.



அந்த முகநூல் பக்கத்தில், " 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்ட திமுக நிலைய வழக்கறிஞர் வில்சனை திமுக எம்.பியாக தேர்ந்தெடுத்து இருக்கிறது " என இடம்பெற்று இருந்தது.

வழக்கறிஞர் பி.வில்சன் ஆகஸ்ட் 2012-ல் இருந்து 2014 மே வரையில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் சௌத்இந்தியா ஆக பதவி வகித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

மேலும் படிக்க : வழக்கறிஞர் பி.வில்சன் கூடங்குளம், கெயில்-க்கு ஆதரவாக வாதாடினாரா ?



2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு தன் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் 2019-ல் வெளியான எட்டு வழிச்சாலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் வழக்கறிஞர் பி.வில்சன் உடைய பெயர் இடம்பெறவில்லை.

தீர்ப்பிற்கு முன்பாக ஏப்ரல் 11-ம் தேதி, எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகியதாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை ஊடக செய்திகளில் வெளியாகியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வில்சன் சார்பில் திமுக வக்கீல்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், சென்னை-சேலம் 8 இடையேயான 8 வழிச் சாலை வழக்கில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எந்த தரப்பினர் சார்பாகவும் ஆஜராகவில்லை என்ற தகவலை அறியாமல் அன்புமணி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அறிக்கையை திரும்ப பெறுவதோடு, அவர் மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டீஸ் மூலம் தெரிவித்து இருந்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக பி.வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது தவறான தகவல். இது தொடர்பான ஏப்ரல் 2019-ல் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தவறான அறிக்கையை வெளியிட்டு வக்கீல் நோட்டீஸ் பெற்றார் என செய்திகளிலேயே வெளியாகி இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…