YouTurn

வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெற்றதை செந்தில்வேல் விமர்சித்ததாக பரவும் போலி ட்வீட் !

வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெற்றதை செந்தில்வேல் விமர்சித்ததாக பரவும் போலி ட்வீட் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உழைக்கும் மக்களின் குரலாக ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்று முழு சங்கியாக மாறி விட்ட ஹாலிவுட் நடிகர் சனாதனவாதி வில் ஸ்மித்திற்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கின்றது.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் வில் ஸ்மித் " கிங் ரிச்சர்ட் " எனும் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதினைப் பெற்றார். இந்நிலையில், " ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தது வேதனையாக இருக்கிறது என ஊடகவியலாளர் செந்தில்வேல் ட்விட்டரில் பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன? 

ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் இயங்கும் @senthillvel79 எனும் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து இப்படியொரு ட்வீட் வெளியிடப்பட்டு இருக்கிறது. அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் @senthilvel79 என்பதாகும்.





மேலும் படிக்க :ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !

மேலும் படிக்க : எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !

இதற்கு முன்பாக, செந்தில்வேல் பெயரில் இயங்கிய போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து தவறான கருத்துகளும், தமிழ்கேள்வி நியூஸ் கார்டு மூலம் போலியான செய்திகளும் பரப்பப்பட்டு இருக்கின்றன.

முடிவு : 

நம் தேடலில், ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கின்றது என ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க