YouTurn

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதாகப் பரவும் பொய்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேசியக் கொடியை வணிக நோக்கத்திற்கான விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என்கிற விதிமுறைக்கு இணங்கவே மறைக்கப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

தேசிய கொடியை மறைப்பது ஒரு குற்றம். விஜய் டிவி தொடர்ந்து பிரிவினைவாத சமூக விரோத கருத்துக்களை பரப்பி வருகிறது. எனவே இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். Vijay TV should be punished for hiding the national flag, please take strict action.


bigg boss sivakarthikeyan

X link

விரிவான விளக்கம்

நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக சிவகார்த்திகேயன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தேசியக் கொடியை வழங்கியிருந்தார். 


https://x.com/i/web/status/1850103721394385222


இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தபோது தேசியக் கொடி மறைக்கப்பட்டு இருந்தது. இப்படி தேசியக் கொடி மறைக்கப்பட்டது குற்றம் என்றும், இது நாட்டிற்கும் கொடிக்கும் நிகழ்த்தப்பட்ட அவமரியாதை என்றும் பாஜக-வை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சில ஊடகங்களும் தேசியக் கொடி மறைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.


https://x.com/i/web/status/1850023930884653112


உண்மை என்ன?


எதற்காகத் தேசியக் கொடியை மறைத்து விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது என்பது குறித்துத் தேடினோம். 


இந்தியாவின் தேசியக் கொடியை எந்த வடிவில், எந்தெந்த காரணங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும், எந்த காரணத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என ’இந்தியக் கொடி குறியீடு - 2002ல்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வணிக, விளம்பர நோக்கங்களுக்காகத் தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதேபோல் வர்த்தக முத்திரையின் வடிவமைப்பிலோ (Trademark of Design) தலைப்பிலோ பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்த நினைத்தால் ஒன்றிய அரசிடமோ அல்லது ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடமோ முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. 


bigg boss sivakarthikeyan


மேலும் தேசியக் கொடியை 3:2 என்ற செவ்வக வடிவில் இருக்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிக் பாஸில்  வட்ட வடிவிலான கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 


தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971-ன் படி தேசியக் கொடியைத் தலையணை, கைக்குட்டை, நாப்கின் அல்லது வேறு எந்த ஆடைப் பொருட்களிலும் எம்ப்ராய்டரி செய்யவோ அச்சிடவோ கூடாது. அதை எந்த விதமான ஆடை அல்லது சீருடையின் ஒரு அங்கமாகப் பயன்படுத்தக் கூடாது.


இதனைக் கொண்டு பார்க்கையில், தேசியக் கொடி தொடர்பான விதிமுறைகளை மீறக்கூடாது என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடி மறைக்கப்பட்டு இருக்கலாம் என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. கொடியை அவமதிக்க வேண்டுமெனத் திட்டமிட்டு இதை செய்ததாகத் தெரியவில்லை. 


முடிவு: 


விஜய் டிவி தேசியக்கொடியை மறைத்து அவமரியாதை செய்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது. தேசியக் கொடியை வணிக நோக்கத்திற்கான விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என்கிற விதிமுறைக்கு இணங்கவே மறைக்கப்பட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.