யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உலகளாவிய நோய்த்தொற்றாக கருதப்படும் கோவிட்-19 ஆல் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முதலில் 1 நாள்...
பரவிய செய்தி
மிகவும் ஆபத்தான வைரஸைக் கட்டுப்படுத்துவற்கான உலக சுகாதார மையத்தின் ஊரடங்கு காலங்களின் செயல்முறை மற்றும் நெறிமுறை.

Post archive link

Post archive link
விரிவான விளக்கம்
உலகளாவிய நோய்த்தொற்றாக கருதப்படும் கோவிட்-19 ஆல் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், முதலில் 1 நாள் ஊரடங்கு சோதனை, அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு, பிறகு 5 நாட்கள் இடைவெளி விட்டு 28 நாட்களுக்கு ஊரடங்கு, 5 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இறுதியாக 15 நாட்கள் ஜூன் வரை நோவல் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஊரடங்கை கடைபிடிக்கப்படும் நாட்களின் அளவை உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளதாக மேற்காணும் தகவல் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
குறிப்பிட்ட நாட்களுக்கு இடைவெளி விட்டு கொரோனா வைரஸ் பரவலின் நிலை அறிந்து மீண்டும் ஊரடங்கு நிலையை கடைபிடிக்க வேண்டும் என வைரலாகும் தகவலில் இடம்பெற்று இருக்கிறது. அவ்வாறான தகவல் உண்மை இல்லை.
அப்படியொரு அறிவிப்பையோ, அறிவுரையையோ உலக சுகாதார மையம் தெரிவித்ததா எனத் தேடுகையில் உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்படி எந்தொரு தகவலும் இடம்பெறவில்லை. அதேபோல், முன்னணி செய்தி ஊடகங்களிலும் அப்படியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
சரி, வைரலாகும் தகவலில் கூறியது போல் பிற நாடுகளில் ஊரடங்கு நிலையை கடைபிடித்து உள்ளார்களா எனத் தேடினோம். நோவல் கொரோனா வைரஸ் பரவிய நாடான சீனா முதல் பிற நாடுகளில் அப்படியொரு முறையை கடைபிடிக்கவில்லை.
சீனாவில் ஜனவரி 23 முதல் மார்ச் 25 வரை ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்பட்டது, சில பகுதிகளில் ஏப்ரல் 8-ம் தேதி வரை நீடிக்கிறது. இத்தாலி நாட்டில் மார்ச் 9 தேதி முதல் தற்போது வரை எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் ஊரடங்கு நிலை தொடர்கிறது. பிரான்ஸ் நாட்டில் மார்ச் 17 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
உலக சுகாதார மையம் தொற்று நோயை கட்டுப்படுத்துவது மற்றும் கையாளும் வழிமுறைகளை அளித்து வருகிறதே தவிர அனைத்து நாடுகளும் எவ்வளவு நாட்கள் ஊரடங்கு நிலையை கடைபிடிக்க வேண்டும் என்ற தகவலை வெளியிடவில்லை.
இந்தியாவில் ஊரடங்கு நிலையை தொடர்வதா அல்லது இல்லையா என்பதை இந்திய அரசே முடிவு செய்ய வேண்டும். அனைத்து வல்லுனர்களும் இந்தியாவில் ஊரடங்கு நிலையை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அரசு தரப்பில் ஊரடங்கு நிலையை தொடர போவதில்லை என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், ஏப்ரல் 14-ம் தேதி நெருங்கும் நேரத்தில் இந்தியாவில் நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகவே வைத்தே காலநீட்டிப்பு தீர்மானிக்கப்படும்.

Messages being circulated on social media as WHO protocol for lockdown are baseless and FAKE.
WHO does NOT have any protocols for lockdowns. @MoHFW_INDIA @PIB_India @UNinIndia
— WHO South-East Asia (@WHOSEARO) April 5, 2020