YouTurn

மலேசியாவில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையானதா? செயற்கையானதா?

மலேசியாவில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையானதா? செயற்கையானதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

மலேசியாவின் ’செலாயாங்’ என்ற சுற்றுலாத்தளத்தில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையாகவே உருவான Hot Springs என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

மலேசியாவில் அதிசய கொதிக்கும் கிணறுகள்... இயற்கையா.? செயற்கையா.? மலேசியா பயணம் செல்பவர்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்...!


image.png


X Link 

விரிவான விளக்கம்

சுடுநீர் கிணறுகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளிடம் கருத்துக் கேட்கும் வீடியோவை பதிவிட்டு, ‘மலேசியாவில்  இருக்கும் இந்த சுடுநீர் கிணறுகள் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா?’ என்று கேள்வி கேட்கும் வகையிலான பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1871075470823104936

உண்மை என்ன:

பரவக் கூடிய வீடியோவில் 1.18ஆவது நிமிடத்தில் இச்சுற்றுலாத்தளத்தின் டிக்கெட் ஒன்று காட்டப்படுகிறது. அதில் “Kolam Air Panas Selayang” என்று எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 

இப்பெயரை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Kolam Air Panas Selayang’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை காணமுடிந்தது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடுநீர் கிணறுகளின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இப்புகைப்படங்கள் பரப்பப்படும் வீடியோவில் காட்டப்படும் கிணறுகளுடன் ஒத்துப்போகிறது.

image.png


இதிலிருந்து இந்த ‘சுடுநீர் கிணறு’ சுற்றுலாத்தளம், மலேசியாவின்  ’செலாயாங்’ என்ற இடத்தில் இருக்கும் ’Hot Spring Pool’ என்பதை உறுதி செய்ய முடிகிறது.

இதுபற்றி மேலும் தேடியதில், ‘Free Malaysia Today’ என்ற செய்தித்தளத்தில் ’இது இயற்கையாக உருவான சுடுநீர் கிணறு (Hot Spring Pool)’ என்று குறிப்பிட்டிருக்கிறது. 


தண்ணீரின் வெப்பநிலை அதனை சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலையைவிட அதிகமாக இருந்தால் அவை Hot Springs  என்று அழைக்கப்படுகின்றன. இது பூமியின் சில இடங்களில் இயற்கையாக இருக்கக்கூடியது.

எரிமலையின் பாறைகளில் உள்ள வெப்பம் நிலத்தடி நீருக்குள் ஊடுருவி அதனால் தண்ணீர் வெப்பமடைந்து  இது போன்ற Hot Spring உருவாகிறது. வேறு சில இடங்களில், நிலத்தடி நீர் பூமிக்கு அடியில் சில கிலோமீட்டர் வரை செல்வதால், அங்கே இருக்கும் பாறைகளின் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தண்ணீர் வெப்பமடைந்து Hot Spring உருவாகிறது.

மேற்கூறிய விவரங்களில் இருந்து வீடியோவில் காட்டப்படும் சுடுநீர் கிணறுகள் (Hot Spring Pool) இயற்கையாக உருவானவை என்பது தெளிவாகிறது.

முடிவு:

இந்த வீடியோவில் இருப்பது மலேசியாவின் ’செலாயாங்’ என்ற சுற்றுலாத்தளத்தில் இருக்கும் சுடுநீர் கிணறுகளாகும். இது இயற்கையாகவே உருவான சுடுநீர் கிணறுகள் (Hot Spring Pool) தான். செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.