YouTurn

நிறம் பார்த்து தான் பற்பசை வாங்க வேண்டுமா? பற்பசை டியூப்களின் விளிம்பில் உள்ள நிறங்கள் எதைக் குறிக்கின்றன?

நிறம் பார்த்து தான் பற்பசை வாங்க வேண்டுமா? பற்பசை டியூப்களின் விளிம்பில் உள்ள நிறங்கள் எதைக் குறிக்கின்றன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பற்பசை வாங்கும் போது அதன் ட்யூப்களின் கீழே பட்டையாக குறிப்பிடப்பட்டுள்ள பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களைப் பார்த்து தான் வாங்க வேண்டுமா? விளக்கம் இதோ!

பரவிய செய்தி

நாம வாங்கற டூத் பேஸ்டில் , கீழ பட்டையாக கலர் கோடு ஒன்று இருக்கும் . பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும். அந்த கலர்களின் அர்த்தம் , பச்சை - இயற்கை; நீலம் - இயற்கை + மருத்துவ குணம்; சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை; கருப்பு - சுத்தமான ரசாயன கலவை . இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானவற்றைப் பார்த்து வாங்குங்கள் . நீலமும்ம் பச்சையும் தான் சரியான தேர்வாக இருக்க முடியும்.


Facebook Link:

விரிவான விளக்கம்

பற்பசை வாங்கும் போது அதன் ட்யூப்களின் கீழே பட்டையாக குறிப்பிடப்பட்டுள்ள பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களைப் பார்த்து தான் வாங்க வேண்டும் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், பற்பசை டியூப்களின் கீழே பட்டையாக பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்கள் இருக்கும். அதில், பச்சை - இயற்கை; நீலம் - இயற்கை + மருத்துவ குணம்; சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை; கருப்பு - சுத்தமான ரசாயன கலவை என்பதைக் குறிக்கிறது. இனி பற்பசை வாங்கும் போது நீலமும்ம் பச்சையும் தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Content not available.


உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் செய்தி கடந்த 2013-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.



Healthline” இணையதளத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், பரவி வரும் இந்த் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தனர். 


அக்கட்டுரையில், “இது உற்பத்தியின் போது உருவாக்கப்பட்ட ஒரு நிறக் குறியீடு மட்டுமே. Light Beam Sensors இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்து, பற்பசை டியூப்களை எங்கு வெட்டுவது, மடிப்பது அல்லது சீல் செய்வது என்று இயந்திரங்களுக்குச் சொல்கின்றன. பற்பசை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை அதன் பின்புறம் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களைப் படித்து, சரியாகக் கண்டறிய முடியும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதே போன்று, “Colgate” இது குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையிலும், “பற்பசை ட்யூப்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அவற்றை எங்கு வெட்டுவது அல்லது சீல் செய்வது என்பதை அறியவே இந்த நிற குறியீடுகள் உள்ளன“ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதே விளக்கத்தை “Times of India” கட்டுரையிலும் காண முடிகிறது. 



மேலும் ஆய்வு செய்ததில், பற்பசை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த தேடலில், “Mouth Healthy report” வெளியிட்டுள்ள கட்டுரை கிடைத்தது. அதில், “Mild abrasives, Humectants, Flavoring agents, Thickening agents, and Detergents" ஆகியவையே பொதுவாக அனைத்து பற்பசைகளிலும் சேர்க்கப்படுகின்றன. அவை அனைத்தும் ஒரே மாதிரியான அடிப்படை பொருட்களைக் கொண்டிருந்தாலும், பற்பசைகள் கூடுதல் கலவைகள் சேர்க்கப்படுவதன் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அதில் “பற்பசையின் தரத்தை அறிய, எப்போதும் பற்பசையில் ADA குறியீடு (ADA Seal) உள்ளாதா என்பதை தேடுங்கள் , ஏனெனில் இது மட்டுமே ஒரு பற்பசை, பாதுகாப்பு மற்றும் அதன் தரத்தை பூர்த்தி செய்துள்ளதா என்பதை உறுதி செய்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


இதன் மூலம் பற்பசை ட்யூப்களின் கீழே பட்டையாக இருக்கும் நிறங்கள, பற்பசை ட்யூப்களை தொழில்சாலைகளில் உற்பத்தி செய்யும் போதே உருவாக்கப்படுகின்றன என்பதையும், இவற்றைத் தயாரிக்கும் போது, இயந்திரங்கள் டியூப்களை எங்கு வெட்டுவது அல்லது சீல்வைப்பது என்பதை எளிதில் புரிந்துகொள்ளவே வண்ணங்கள் குறிக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், பற்பசை வாங்கும் போது அதன் ட்யூப்களின் கீழே பட்டையாக குறிப்பிடப்பட்டுள்ள பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களைப் பார்த்து தான் வாங்க வேண்டும் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க