YouTurn

மேற்கு வங்கத்தில் ராணுவ அதிகாரி மருத்துவமனைக்கு செல்வதை முஸ்லீம்கள் தடுப்பதாக வதந்தி !

மேற்கு வங்கத்தில் ராணுவ அதிகாரி மருத்துவமனைக்கு செல்வதை முஸ்லீம்கள் தடுப்பதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்த வீடியோவில் நீங்கள் காண்பது மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜியின் ஆட்சியின் கீழ் இருக்கும் நியூ கூச்பிஹர் என்ற ஊரிலிருந்து உடல்நசரியில்லாத ஒரு ராணுவ அதிகாரியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்தி இங்குள்ள முஸ்லிம்கள் செய்யும் அராஜகத்தை பாருங்கள் ராணுவத்திற்கு இந்த நிலை என்றால் சாதாரண இந்துக்களாகிய நாம் என்ன செய்ய முடியும் .



Facebook link

விரிவான விளக்கம்

மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் உள்ள நியூ கூச்பிஹர் என்ற ஊரில் இருந்து உடல்நிலை சரியில்லாத ராணுவ அதிகாரியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது முஸ்லீம்கள் வழிமறித்ததாக 2.52 நிமிட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?



வீடியோவில் முதலில் வரும் ராணுவ வாகனத்தின் முகப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ராணுவ வீரர்களின் உடையில் இருக்கும் குறியீடு போன்றவற்றை பார்க்கையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ போன்றே இல்லை. அந்த லோகோ பங்களாதேஷ் நாட்டின் ராணுவத்துடையது என அறிய முடிகிறது.



ராணுவ ஆம்புலன்ஸை முஸ்லீம்கள் தடுக்கும் வீடியோ குறித்து தேடுகையில், 2021 மார்ச் 29-ம் தேதி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவரின் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.



மார்ச் 26-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக டாக்கா சென்றார். அவரின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ காட்சியும் அந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கக்கூடும்.

பிரதமர் மோடியின் முஸ்லீம் விரோத கொள்கைகளுக்கு எதிராக பங்களாதேஷ் இஸ்லாமியர்கள், மதரஸா மாணவர்கள் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தியதாகவும், இந்த ஆர்ப்பாட்டங்களில் 12 பேர் உயிரிழந்ததாகவும் மார்ச் 31-ம் தேதி பிபிசி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், மேற்கு வங்கத்தில் உடல்நிலை சரியில்லாத ராணுவ அதிகாரியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை முஸ்லீம்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ தவறானது என்றும், அது மார்ச் மாதம் பங்களாதேஷ் நாட்டில் எடுக்கப்பட்டது என்றும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க