யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லீம் கும்பல் ரயில்களில் கற்களை ஏறிந்து தேசப்படுத்திய போது குழந்தை ஒற்றை கண்ணை இழந்ததாக இரத்த காயத்துடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் பரப்பி வருகின்றனர். Facebook link உண்மை என்ன ? இந்திய அளவில்...
பரவிய செய்தி
மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை இழந்த குழந்தை. இந்த குழந்தையை காயப்படுத்தியதற்கும் CAB எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம் ? மதத்தின் பெயரால் மனநோயாளிகளாக மாறாதீர்கள்.

விரிவான விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லீம் கும்பல் ரயில்களில் கற்களை ஏறிந்து தேசப்படுத்திய போது குழந்தை ஒற்றை கண்ணை இழந்ததாக இரத்த காயத்துடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் பரப்பி வருகின்றனர்.

Facebook link
உண்மை என்ன ?
இந்திய அளவில் பகிரப்படும் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், " 2016-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி ட்விட்டர்வாசி ஒருவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, சிரியாவைச் சேர்ந்த நகரமான அலெபோ பகுதி எனக் குறிப்பிட்டு இருக்கிறார் ".

Twitter link | archived link
இதேபோல், 2016 முதல் 2017-களில் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதே படம் பகிரப்பட்டு உள்ளது. ஆனால், குழந்தையுடைய புகைப்படத்தின் தொடக்கம் எங்கு இருந்து என்றும், குழந்தை குறித்த செய்திகளும் உறுதியாக கிடைக்கவில்லை.

Facebook link | archived link
இருப்பினும், கண்ணை இழந்த குழந்தையின் புகைப்படம் 3 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி இருந்துள்ளது. அது இந்தியாவில் இல்லை என்றும் பல பதிவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அந்த புகைப்படத்தை வைத்து மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களால் சேதப்படுத்தப்பட்ட ரயிலில் கண்ணை இழந்த குழந்தை என தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : மேற்கு வங்கம் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தையா ?| உண்மை அறிக.
இதற்கு முன்பாகவும் மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தை என பங்களாதேஷ் நாட்டில் ரயில் விபத்தில் சிக்கிய குழந்தையின் புகைப்படத்தை தவறாக பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.